Periya Puranam
இவற்றைக் கைவிட்டுத்
திருவள்ளுவரையும் சேக்கிழாரையும்
மறந்துவிட்டமையே சோழர் காவிரி நாட்டின் இக்காலக் கொடுமைகளுக்குக்
காரணமாம் என்பது அறிந்தோர் கருத்து.
4. திருவைந்தெழுத்தை முறையாகப் பயின்று ஓதுவதினால்,
பிணியின்றி
மக்கள் வாழ்வு பெறுவர் என்பதையும் இந்நாள் மக்கள்கண்டு ஒழுகுதல்
வேண்டும்.
5. இப்பகுதியிற் கண்ட சிறப்பும் செழிப்பும் மகிழ்ச்சியும்
ஆசிரியர்
காலத்து உண்மையாய்க் கண்டவை. இவை ஒரு சிறிதும் புனைந்துரையல்ல.
அந்நிலைமாறி, இவை தமிழ்ப் புலவர் சித்திரித்துக் காட்டும் புனைந்துரையோ?
என்று சந்தேகிக்கும்படி இந்நாள் மக்கள் தரித்திரம் - கல்வியில்லாமை -
தீயொழுக்கம் முதலியவைகளால் துன்பமே பட்டு அழியும் நிலைக்குக்
காரணங்களை இப்புராணத்தின் துணை கொண்டு ஆராய்ந்து தெளிந்து
ஒழுகினால் நலமடைவோம்.
6. அரசாங்க விவசாயப் பண்ணையார் இதிற் குறித்த
உழவுத் தொழில்
உண்மைகளை ஆராய்ந்து நலம்பெறத் தகுவர்.
முறையாகப் பாராயணஞ் செய்வோர் இப்பகுதியில் எங்கும்
நிறுத்தவும்
தொடங்கவும் கூடும்.
திருநாட்டுச்
சிறப்பு முற்றிற்று
|
திருவாரூர்த்
86.
|
சொன்ன
நாட்டிடைத் தொன்மையின் மிக்கது |
|
|
மன்னு
மாமல ராள்வழி பட்டது
வன்னி யாறு மதிபொதி செஞ்சடைச்
சென்னி யார்திரு வாரூர்த் திருநகர். |
1 |
திருவாரூர்த்
திருநகரச் சிறப்பு
- இது திருமலைச் சருக்கத்தில்
மூன்றாவது பகுதியின் பெயர். முன்னர்க்கூறிய முறையிலே நாட்டுச் சிறப்பினை
அடுத்து நகரத்தின் சிறப்புக்கூறுகின்றார். கயிலைமலையும் சோழநாடும்
இப்புராணத்திற்கு உரிய மலையும் நாடுமாகக் கொண்டமைக்குக் காரணம்
முன்னர்க்கூறப்பெற்றது. இப்புராணத்திற்கு முதனூலாகிய திருத்
தொண்டத்தொகை எழுந்த இடமும், அதற்குப் பொருளாகிய அடியார் கூட்டம்
எழுந்தருளிய இடமும் ஆகிய திருவாரூரே இதற்கு உரிய நகரமாம் என்பதும்
முன்னர்ச் சொல்லப்பெற்றது.
இப்பகுதியின் பெயர் பல பதிப்புக்களிலும் ஏட்டுப்
பிரதிகளிலும்
பற்பலவாறு காணப் பெறுகின்றன. அவை மநுநீதிச் சோழர் புராணம் -
மநுநீதிகண்ட புராணம் - திருநகரச் சிறப்பு - திருவாரூர்ச் சிறப்பு - தேரூர்ந்த
புராணம் - என்பன. இப்பகுதியிற்கூறிய சிறப்புக்களிலே பெரும்பாலும்
விளங்க எடுத்துக்காட்டிய சரிதம் மனுச்சோழர் செய்தியாதலின், அவ்வாறு
பெயர்கள் கண்டார்போலும். ஆயினும் மேலே தலைப்பிற் கண்டதே
பெயராகக் கொள்ளத்தக்கதாம். அடியேனுக்குக் கிடைத்த பற்பல
ஏட்டுப்பிரதிகளிலும் மிக்க ஆதரவாகக் கொள்ளத்தக்கனவா
|
|
|
|