Periya Puranam
இந்நாட்
கல்விமுறை அறிஞர்களால் முற்றும் வெறுக்கத் தக்கது என்பதும்
இங்குப் பெறப்படும். இந்நாள் நாட்டின் கேட்டிற்கு இத்தகைய கல்விமுறையே
காரணம் என்பர்.
திருவள்ளுவ நாயனார் “கல்வி“, “கல்லாமை“
என இரண்டாக வகுத்து,
இதனைப் பொருட்பால் அரசியலில் இறைமாட்சியினை அடுத்து வைத்துள்ள
சிறப்பை இங்கு உன்னுக. ‘கல்வி' எனும் அதிகாரத்திற்குத் தோற்றுவாய்செய்த
ஆசிரியர் பரிமேலழகர் “அஃதாவது அவ்வரசன் தான் கற்றற்குரிய
நூல்களைக் கற்றல். அவையாவன : அறநூலும், நீதிநூலும், யானை, குதிரை,
தேர், படைக்கல மென்றிவற்றினூல்களும் முதலாயின. அரசன் அறிவுடைய
னாயக்கால் தன்னுயிர்க்கேயன்றி மன்னுயிர்க்கும் பயன்படுதல் நோக்கி,
இஃதரசியலுள் வைக்கப்பட்ட தாயினும், யாவர்க்கும் உறுதி பயத்தற்
சிறப்புடைமையிற் பொதுப்படக் கூறுகின்றார்“ என்று பாகுபடுத்திக் கூறியதும்
இப்பாட்டிலும் வைத்து உணர்க.
கவன வெம்புரவி
- என்பதும் பாடம். 18
| 104.
|
அளவிறொல்
கலைகண் முற்றி யரும்பெறற் றந்தை
மிக்க |
|
| |
வுளமகிழ்
காதல் கூர வோங்கிய குணத்தா னீடி
யிளவர சென்னுந் தன்மை யெய்துதற் கணிய னாகி
வளரிளம் பரிதி போன்று வாழுநா ளொருநாண்
மைந்தன். |
19 |
(இ-ள்.)
அளவில்...முற்றி - (மேற்கூறிய) எல்லையில்லாத பழமையான
கலைகள் எல்லாம் நிரம்பப் பெற்றவனாய்; அரும்பெறல்...கூர - பெறலரும் தந்தையார் மனம்
மகிழும் மிக்க ஆசை வளரும்படியாக; ஓங்கிய...நீடி -
மேன்மேல் வளரும் நற்குணங்களால் நிறைந்தவனாய்; இளவரசு...ஆகி -
இளவரசனாம் தகுதியை அடையும் பக்குவம் உடையவனாகி; வளர்...மைந்தன்
- ஒளிவளர்கின்ற உதய சூரியன்போன்று வாழ்கிற அந்நாள்களில் ஒருநாள்
அம்மைந்தனானவன் -
(வி-ரை.)
இப்பாட்டில் வரும் மைந்தன் என்னும் எழுவாய்
வரும்பாட்டிற் போந்தான் என்னும் வினைமுற்றோடு முடிந்தது.
அளவில் தொல் கலைகள்
- மேற்கூறிய தெய்வக்கலைகளும் தொழிற்
கலைகளும்.
முற்றி - மேலே கூறியபடி ஓதியும் கற்றும்
நிறைவை அடைந்து,
இளவரசராய் நிற்கும் தகுதிபெற முற்றி என்க.
அருள் பெறல் தந்தை - மேல் 17-ம் பாட்டில்
“தவத்தால்“
என்பதற்கேற்பக் கூறினார். தந்தையும் மைந்தனும் ஒருவர்க்கொருவர்
செய்தபேறு இவ்வாறு குறிக்கப்பெற்றது.
“இவன்றந்தை யென்னோற்றான் கொல்...“
என்ற திருக்குறளும் இங்கு
வைத்துக் காண்க.
காதல் கூர - குணத்தால்
நீடி - குணம் நீடுதலால் காதல் கூர்ந்து
மிக்கது - எனக் காரண காரியமாகக் கொள்க. நீடுதல் - காரணம். மிகுதல்
- காரியம்.
இளவர சென்னுந் தன்மை
- இளவரசென்பது அரசனுக்கு அடுத்த
நிலையில் ஆட்சிக் குரியதொரு பதவி. அரசு தாங்குதற்குரிய எல்லாத்
தன்மைகளும் நிரம்பப்பெற்ற பின்னரே இளவரசு என்கிற பதவி
வழங்கப்பெறும். கண்ணப்ப நாயனார் புராணம்,
| “...
அடற்சிலை ஆண்மை முற்றக் கற்றனன் ...“ |
(41) |
“வண்ண
வெஞ்சிலையும் மற்றப் படைகளும் மலரக் கற்றுக்
கண்ணகன் சாயல்பொங்கக் கலைவளர் திங்க ளேபோல்
எண்ணிரண் டாண்டின் செவ்வி யெத்தினார் ...“ |
(42) |
|
|
|
|