பக்கம் எண் :


திருக்கூட்டச் சிறப்பு129

Periya Puranam
உள்பொருளினது தன்மை. அது, “கண்ணு மாவியு மாம்பெருங் காவல்“ என்று
மேலே முதலாவதாக எடுத்துக் கூறிய தன்மை. கழறிற்றறிவார் நாயனாரது
உள்ளக் கிடையேபோல, இவ்வரசனும் எல்லாவுயிர்க்குங் காவல்புரிதலே
கடமை என்பதைத் தன் உள்ளக்கிடையாய்க் கொண்டவன் என்க.

     சோதித்தால் என்ன - சோதிப்பதற்காக வந்ததுபோல
- எல்லாம்
அறிந்த அறக்கடவுளுக்கு மன்னனது சிந்தையின் உண்மையைச் சோதித்து
அறியவேண்டியது அவசியமில்லாமையின் சோதிக்க என்னாது, சோதித்தாற்
போல என்றார். இப்புராணத்திற் பின்னே பல சரிதங்களிலும், இவ்வாறு
நிகழ்கின்றபோது அவ்வவர் உள்ளக்கிடையை உலகினர்க்குக் காட்டுதலே
காரணம் என்று ஆசிரியர் காட்டுவர்.

     மனித்தர் தன் வரவு காணா - மனித்தர்
- மனிதர் என்பது எதுகை
நோக்கி மனித்தர் என ஒற்று இரட்டித்தது - ‘மனித்தப் பிறவியும்' என்பது
வாகீசர் திருவாக்கு. அறக் கடவுளின் செயல் வெறும் மனிதரது ஊனக்
கண்ணிற்குப் புலப்படாமையின் காணாவண்ணம் என்றார்.

     வண்ணம் நல் ஆன்
- நல்வண்ணம் என்று மாற்றிக் கூட்டுக.
வண்ணம் - அழகும் உருவமும். வண்ண - நல் - கன்று - என்க புனிற்று
இளம் - மிக இளமையுடைய. புனிறு - ஈன்றணிமை.

     துள்ளிப் போந்தது
- கன்று மறுகினூடு புகுந்தபடி. நடப்பன என்னும்
வகுப்பைச் சேர்ந்த அக்கன்று, நடவாமலும், தொடர்ந்து ஓடாமலும்
ஓரிடத்திருந்து மற்றோரிடத்திற்குத் துள்ளிப் புகுந்தது. மனித்தர் அதன்வரவு
காணாமைக்குக் காரணங் கூறியவாறு.

     அம்மறுகின் ஊடு
- அந்தத் தெருவுக்குள்ளே. வழிபோவார் வந்து
போதலின் தெரு மறுகு என்னப்பட்டது. தெருவின் இடையே வரும்
தேர்க்கால் தன் மீது செல்லப்பட்டதைப் பின்னே கூறுகின்றமையின் மறுகின்
என்னாது மறுகின் ஊடு என்றார்.

மறுகின் ஊடே
- என்பதும் பாடம். 22

108. அம்புனிற் றாவின் கன்றோ ரபாயத்தி னூடு
                                 போகிச்
 
  செம்பொனின் றேர்க்கான் மீது விசையினாற்
                          செல்லப் பட்டே
உம்பரி னடையக் கண்டங் குருகுதா யலமந்
                                 தோடி
வெம்பிடு மலறுங் சோரு மொய்ந்நடுக் குற்று
                                 வீழும்.
23

     (இ-ள்.) அம்...கண்டு - (மேலே சொல்லியவாறு துள்ளிப் போந்த)
பசுவின் இளங்கன்று ஒரு அபாயம் நேரத்தக்க வகையிலே குறுக்கே
செல்லவே, தேரினது பொற்சக்கரம் தன்மேல் வேகமாக ஊரப்பட்டு
விண்ணுலகை அடைந்தது. அதனைக் கண்டு; அங்கு உருகு ... வீழும் -
அங்கே மிக மன உருக்கத்தை அடைந்த அதன் தாய்ப்பசு வெம்பிற்று -
அலறிற்று - சோர்ந்தது - உடம்பு நடுநடுங்கி வீழ்ந்தது.

     (வி-ரை.) அம் - புனிற்று ஆவின் கன்று - அம் - அழகிய. இது
கன்றுக்கு அடைமொழி. மேற்பாட்டிலே “வண்ணம் நல் புனிற்று இளம்“
என்று கூறியதற்கேற்ப இங்கும் அம் என்றார். காண்பார் யார்க்கும் அதன்
அழகும் வண்ணமுமே கண்ணுக்கு முன் தோன்றி அதனிடத்திலே இரக்கம்
மிகுதி உண்டாக்குதலின் அதனையே வற்புறுத்திக் கூறினார்.

     ஓர் அபாயத்தின் ஊடுபோகி - தேர்க்கால் செல்லும் வழியினின்றும்
விலகிப் போகாது அதனுட்படுமாறு அபாயத்தினுள்ளே புக்கதனால்.

     தேர்க்கால்மீது செல்லப் பட்டே - தேரினது சக்கரம் அதன்மேலே
ஊரப்பட்டு, அதனால் (இறந்து) பட்டு.