“சென்னி
யபயன், குலோத்துங்கச் சோழன், றில்லைத் திருவெலலை
பொன்னின் மயமாக் கியவளவர் போரே, றென்றும் புவிகாக்கும்
மன்னர் பெருமா, னநபாயன” -
சண்டீசர்புராணம் - 8. |
“மன்னுதிருத்
தில்லைநகர் மணிவீதி யணிவிளங்கும் சென்னி,
நீடநபாயன்.........
”
-
புகழச்சோழ நாயனார் புராணம் - 8. |
கொண்டு
விரும்பும் அநபாயன் அரசவை என நிகழ்காலத்திற்
கூறியதனால் காலமுங் களனும் காரணமுங் கூறியதாயிற்று. நீடூழிபார்
ஆயசீர் அநபாயன் - இப்போது அநபாயர் உலகை ஆள்கின்றார்; அவர்
அரசு நீடூழி நிலை பெறுக; அதன்கீழ் உலகம் ஆகுக; (ஆக்கம் பெறுக.) -
என்று இப்புராணம் பாடுவித்த உபகாரத்தின் பொருட்டு வாழ்த்துக்
கூறியவாறுமாயிற்று. “வேந்தனு மோங்குக” என்ற தேவாரமும் காண்க.
“.......வையம்
பொதுக்கடிந் தினிது காக்கும்
கொற்றவ னநபா யன்பொற் குடைநிழற் குளிர்வது..... ”
-
திருநாட்டுச் சிறப்பு - 35. |
என்ற இடத்திலேயும் அந்நாளிற் சோழவளநாடு அநபாயருடைய ஆளுகையில்
வாழ்கின்றதாக நிகழ்காலத்துக் குறித்ததும் காண்க. பாடுவித்த அரசன்
சிறப்பை வாழ்த்தியதும் நன்றி பாராட்டியதும் ஆம். இக்கருத்துப் பற்றியே
ஆசிரியர் அநபாயருடைய பெயரை இப்புராணத்துள்ளே பதினொரு
இடங்களில் அமைத்துள்ளார். அங்கங்கே கண்டு கொள்க.1 8
| 9.
|
அருளி
னீர்மைத் திருத்தொண் டறிவருந்
|
|
| |
தெருளி
னீரிது செப்புதற் காமெனின்
“வெருளின் மெய்ம்மொழி வானிழல் கூறிய
பொருளி னாகு” மெனப்புகல் வாமன்றே. |
9
|
(இ-ள்.)
அருளின்.......தெருளினீர் - அருள்வழி நிற்கும்
தன்மையாயுள்ள திருத்தொண்டின் புகழ் அறிய அரிதென்று (மேலே
“அளவுகூட உரைப்பது ” என்றும், “தெரிவரும் பெருமை ” என்றும்
கூறி
உணர்ந்துள்ள நீர்; இது செப்புதற்கு ஆம்? எனின் - இது செப்புதற்குத்
துணியலாமோ? என்பீராகில்; வெருள் இல்....பொருளின்
- மயக்க நீக்கும் மெய்ம்மொழியாலே வானினிடத்தே யமர்ந்து கூறியருளிய பொருளின்
துணையாலே; “ஆம்” எனப்புகல்வாம்
- அது யாம் செப்புதற்கு
உரித்தேயாம் என்று துணிந்து கூறுவோம்;அன்றே - அவன் மெய்ம்மொழி
கூறித் துணைசெய்த அப்பொழுதே.
(வி-ரை.)
அருளின் நீர்மைத் திருத்தொண்டு - பிறிதொன்றினும்
படாது அருள்வயப்பட்டு அவ்வழியே நிற்கும் திருத்தொண்டு. “ஏகனாகி
இறைபணி நிற்க” என்ற விதிப்படி உள்ள அடிமைத் திறம். அறிவரும்
தெருளினீர் - அறிவரிது என்ற தெருட்சி பெற்ற, அறிவு - அரும் தெருள் -
இல் - நீர் என்று பிரித்து, உரிய அறிவும் அரிய ஞானமும் இல்லாத நீர்
என்று உரைத்தலும் ஒன்று.
ஆம் எனின் - ஆமோ என்று வினவுவீராயின். ஆம்
- ஆமோ?;
வினாத்தொக்கது.
வெருள்
- வெருட்சி; மயக்கம்; இல் - இல்லையாகச் செய்யும்;
போக்கும்.
மெய் மொழி வான்நிழல் கூறிய பொருள் - (1) வானினின்றும்
நிழலாய்க்
கூறிய மெய்ம்மொழிப் பொருள். (2) மெய்ம்மொழிவான்
நிழல் -
உண்மையே மொழிபவன் - சத்தாகிய இறைவனுடைய நிழல். வெளிப்படாத
நிலை - மறைந்து
1 எனது
சேக்கிழார் - 180 - 183 பக்கங்களிற்
காண்க.
|