பக்கம் எண் :


தில்லைவாழந்தணர்சருக்கம்429

Periya Puranam
தில்லைவாழந்தணர் புராணம்

தொகை

“தில்லைவா ழந்தணர்த மடியார்க்கு மடியேன்;
                - திருத்தொண்டத்தொகை

வகை

“செப்பத் தகுபுகழ்த் தில்லைப் பதியிற் செழுமறையோர்
ஒப்பப் புவனங்கண் மூன்றினு மும்பரி னூரெரித்த
அப்பர்க் கமுதத் திருநடர்க் கந்திப் பிறையணிந்த
துப்பர்க் குரிமைத் தொழில்புரி வோர்தமைச் சொல்லுதுமே“


                      - திருத்தொண்டர் திருவந்தாதி

விரி

350. ஆதியாய் நடுவு மாகி யளவிலா வளவு மாகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா வேக மாகிப் பெண்ணுமா யாணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி
   1