|
விரும்பியது தவறு என்பது
குறிப்பு என்று விசேடமுரைப்பது
பொருந்தாமையறிக. ஆயின் அழகில்லா மனைவியரை நீத்துப் பரத்தையிற்
சேர்தல் தகுதியென்னவரும். பரத்தையர்களைப் பொருட் பெண்டிர்
-
வரைவின் மகளிர் முதலிய பெயர்களால் முன்னூல்களில் வழங்குவர்.
இவரோடணைதல் உலக நீதிநூல்களால் விலக்கப்பட்டதே.
இருமனப்
பெண்டிருங் கள்ளுங் கவறுந்
திருநீக்கப் பட்டார் தொடர்பு -
குறள். |
முதலிய விதிகள் காண்க.
ஆயின் இங்கு இச்சரிதத்தின் குறிக்கோளை
மறந்து இவ்வாறு சாமானிய உலக ஒழுக்க நூல்களின் விதி விலக்குக்களை
அளவையாகக் கொண்டு ஆராய்ந்து முடிபு கூறுதல் ஈண்டைக்கும்
பொருந்தாத ஆராய்ச்சி என்பது அறிந்தோர் முடிபு. மூர்க்க நாயனார்
சூதாடி வந்த பொருளால் இறைவனடியாரை ஊட்டினார். கண்ணப்ப
நாயனார் வேட்டையாடி உயிர்க்கொலைசெய்து இறைவனை ஊட்டினார்.
கோட்புலி நாயனார் இறைவனை ஊட்டும் திருவமுதுக்கு வைத்த நெல்லை
உண்டு அவனது ஆணை பிழைத்த கிளைஞரைக் கொன்றனர். இவற்றை
எந்த நூல் விதிப்படி அளவை காண்பது? உலகத்திலே இருந்தும் அதனைக்
கடந்த நிலையில் வாழ்ந்து, பார்வைக்கு மட்டும் ஏனை மனிதர்போல நின்ற
பெருமக்களுக்குச் சாமானிய உயிர்களுக்கு விதித்த உலகநீதி விதிகள்
யாங்ஙனம் பொருந்தும்?
இறைவனது திருநீலகண்டம் என்ற ஒரு
சொல்லாகிய பேதியா
ஆணை கேட்ட உடனே, இருவரும் அவ்வில்லத்தைவிட்டு நீங்காது
ஒருங்கு வாழ்ந்தும் அப்போது தமக்கிருந்த இளமை மீதூர வின்பத்
துறையிலெளியராந் தன்மையையும், மனைவியாரது திருவினுமுருவ மிக்க
எழிலைத் துய்க்கும் உரிமையினையுந், திருமால் முதலிய தேவருங்
கடத்தற்கரிய காமத்தின் வலிமையையுங் கடந்து, மூப்பு வரும்வரை நாள்
கழித்து வாழ்ந்த நாயனாரது தன்மையை அளந்து குறைவு நிறைவு
காணுதற்கு இந்த உலக விதி விலக்கு இலக்கணங்களா அளவு
கோல்களாகும்? நவீன ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறான தவறாகிய
ஆராய்ச்சித் துறையிற் சென்று உண்மை நாயன்மார்களாகிய எந்தம்
பெருமக்களின் சிவவாழ்க்கையிலே தவறுகண்டு அபசாரப்படாமலிருப்பதே
முறையாம். மேலும், நாயனாரது இச்செயலே இச்சரித நிகழ்ச்சிக்குக்
காரணமாயினமையும் காண்க.
பரத்தையிற் பிரிவு என்பது தமிழின் முந்து நூல்களிற்கண்ட
முறை.
அதன் முறையும் இயல்பும் அமைவும் அகத்தமிழ் இலக்கணங்களுட்
காண்க. இது தலைவன் தனக்கின்பம் வேண்டிப் பிரிந்து பரத்தையிற்
சேர்தலன்று என்பது அகத்தமிழ் இலக்கணம். பரத்தையிற்
பிரிதல்
என்பது தலைமகளை வரைந்தெய்திய பின்னர், வைகலும் பாலே
நுகர்வானொருவன் இடையே புளிங்காடியுநுகர்ந்து அதனினிமை
யறிந்தாற்போல, அவணுகர்ச்சியினிமை யறிதற்குப் புறப்பெண்டிர் மாட்டுப்
பிரியா நிற்றல். அல்லதூஉம் பண்ணும் பாடலு முதலாயின காட்டிப்
புறப்பெண்டிர் தன்னைக் காதலித்தாற் றானெல்லார்க்குந் தலைவனாகலின்
அவர்க்கு மின்பஞ் செய்யப் பிரியா நிற்றல் என்றுமாம். அல்லதூஉம்
தலைமகளை ஊடலறிவித்தற்குப் பிரிதல் என்றுமாம். இவ்வாறொழிந்து
தனக்கின்பம் வேண்டிப் பிரிவனாயின், கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு
மைம்புலனு மொண்டொடி கண்ணே யுள என்பதனால், இவளுக்குத்
தலைமகளென்னும் பெயரோடு மாறுபட்டுத் தனது பெருமையோடு மாறுபடா
நிற்கும் என்று பேராசிரியர் உரைத்தமையும் காண்க. இதனைக் குறிக்கவே
இங்கு ஆசிரியர் திருவினு முருவ மிக்கார் என்றதாம். பரத்தைபா
லணைந்து என்றது நாயனார் பரத்தையைக் கூடினார் என்பதன்று எனப்
பொருள் கூறுவாருமுண்டு. எங்ஙனமாயினும் மேற்கூறிய உரையாளரின்
விசேட ஆராய்ச்சித் தவறு நாயனார்பாற் சாராமை உணரப்படும்.
இவ்வாராய்ச்சி தமிழ் இலக்கண இலக்கியங்களிற் கூறிய ஒப்பாரு
மிக்காருமில்லாத தலைமகனுக்கெல்லாந் தவறு
கூட்டியதும் காண்க.
பொறுத்துவந்த
- பொருதுவந்த - உருவின்மிக்கார் - என்பனவும்
பாடங்கள்.
|