| 366.
|
ஆதியார்
நீல கண்டத் தளவுதாங் கொண்ட
வார்வம்
|
|
| |
பேதியா வானை கேட்ட பெரியவர் பெயர்ந்து
நீங்கி,
யேதிலார் போல நோக்கி, “யெம்மையென்
றதனான்
மற்றை
மாதரார் தமையு மென்றன் மனத்தினுந் தீண்டே“
னென்றார்.
|
7 |
(இ-ள்.)
ஆதியார்.........பெரியவர் - முழுமுதற்
கடவுளாகிய
சிவபெருமானது திருநீலகண்டத்தின் அளவிலே தாம்மேற்கொண்ட
ஆசையானது வேறெதனாலும் அதனைக் கடக்கச் செய்யலாற்றாத
திருவாணையைக் கேட்ட பெரியோராகிய நாயனார்; பெயர்ந்து....நோக்கி
- (மெய்யுற அணையும் முயற்சியிலிருந்து) ஒதுங்கிப் போய், அம்மையாரைத்
தமது மனைவியாராகப் பாராது அயலாரைப் போல உட்கொண்டு நோக்கி;
“எம்மை“.....என்றார் - (“என்னை“ என்னாது) “எம்மை
என்று
உளப்பாட்டுப் பன்மையாகக் கூறியதனால் உம்மையேயன்றி
உம்மினத்தைச் சேர்ந்த ஏனைய மாதரார் எவரையும் எனது
மனத்தாலும் இனித் தீண்டமாட்டேன்“ என்றார்.
(வி-ரை.)
நீலகண்டத் தளவுகொண்ட ஆர்வம்
-
நீலகண்டத்தினிடத்தே மேற்கொண்டு வைத்துள்ள ஆசை. பேதியா
ஆணை - அவ்வாறு வைத்த ஆசையினாலே வேறு எவ்வாற்றானும்
கடக்க முடியாத - தாண்டிச்செல்ல முடியாத - ஆணை. பேதியா
-
ஆர்வம் ஒரு சிறிதும் வேறுபடாத பெரியவர்
என்று கூட்டி யுரைப்பர்
ஸ்ரீமத் ஆறுமுகத் தம்பிரான் அவர்கள். ஆர்வம்
பேதியர் -
மனைவியாரிடத்துத் தாம் கொண்ட ஆசை பேதிக்கும்படி என்றும்,
கண்டத்தினிடத்தே தாம் வைத்த ஆர்வம் பேதியாமலிருக்கும் பொருட்டு
என்றும் பற்பலவாறு உரைகள் கூறுவாருமுண்டு. அவை யொன்றும்
பொருந்தாமை உணர்ந்து கொள்க.
பெரியவர்
- சிவபெருமா னொருவரையேயன்றிப், பெருந்தேவரும்
பிறர் யாவரும் வெல்லுதற்கரிய காமவிச்சையை ஆணையின் வரம்பிலே
நின்று வென்றமையால் செய்தற்கரிய செயல் செய்தவராயினார் நாயனார்;
அதுபற்றி இங்குப் பெரியவர் என்றார். முன்னர்க் கேள்வர் (364) என்றும்,
அன்பனார் (365) என்றும் அவ்வவ்விடத்துக்குப் பொருந்த உரைத்தமை
காண்க. அவரே இங்கு இப்புராணத்துட்டுதிக்கப்பெறுந் தகுதியராய்ப்
பெரியராயின தன்மையும் இதனால் குறிக்கப் பெற்றது.
ஏதிலார் போல
- ஒரு சம்பந்தமுமில்லாத அயலார். இதற்கு
அயலான் மனைவிபோல என்றுரை கூறுவாருமுண்டு. அது மரபன்றாம்;
ஆதலிற்பொருந்தாதென்க.
மனத்தினுந் தீண்டேன்
- மனத்திற்றீண்டுதல - நினைத்தல்;
தீண்ட நினைத்தலும் தீண்டுதலின் பயனை விளைத்தேவிடும். நினைப்பே
கருமமாகி வினைக்கு முளையாகு மென்பது சாத்திரம். ஆலாலசுந்தரர்
திருக்கயிலாயத்தில் மாதர் மேன் மனம் போக்கியசெயலே அவர் உலகில்
அவதரிக்கக் காரணமாயிற்று என்பது முன்னர்த் திருமலைச் சருக்கத்திற்
கேட்கப்பெற்றது. எனவே, மனத்தாற் றீண்டுதலும் ஆணை
கடத்தலேயாமாதலின் அதுவும் செய்யேன் என்பார் இவ்வாறு கூறினார்.
மாதரார் தமையும்
- உம்மைத் தீண்டாமையேயன்றி என உம்மை
இறந்தது தழுவிய எச்சவும்மை. மனத்தினும் செய்கையிற் றீண்டாமையே
யன்றி என இதுவும் எச்சவும்மை. மனத்திற் றீண்டாமை இங்குக் காம
நோக்கத்தின் அனுபவப் பொருளாய் எண்ணாமை மாத்திரையாய் நின்றது.
வேறெவ்வாற்றானும் நினையாமை குறித்ததன்று என்பதனை நோக்கி
-
என்றும், வரும்பாட்டில் போற்றிச் செய்தே என்றும், வருவனவற்றாலுணர்க.
எம்மை
- என்று மனைவியார் கூறி ஆணையிட்டது நாயனாரை
நல்வழிப்படுத்தற்கேயாம் என்றும், நாயனார் நீலகண்டத்தின்
ஆர்வத்தாலே, எம்மை என்ற சொல்லாற்றல் கொண்டு பெண்கள்
எவர்மேலும் காமநோக்கம் செலுத்தாமற் செய்த பெருமைக்குத் துணை
நின்ற பெருமை மனைவியார்க்குரியது என்றும், இப்புராணத்
|