பக்கம் எண் :


இயற்பகை நாயனார் புராணம் 495

Periya Puranam

     9. மனைவியிடத்தும் விதிவழியே நின்று மக்கட்பேற்றினைக் குறித்தே
(“வரையா நாளின் மகப்பேறு குறித்து“ ) மெய்யுறு புணர்ச்சி கொள்ளத்
தக்கது. இறைவ னாணைவழியின் முன்னர் அதுவும் அடிப்படுத்தி ஒதுக்கத்
தக்கதாம். ஏனைய எல்லா உலகானுபவங்களும் இவ்வாறே கொள்ளத்
தக்கன. இதுவே மக்கள் அறிந்து விரும்பிக் கைக்கொண்டு உய்யு
நன்னெறியாம்.

     10. ஒழுக்கம், புகழும் பெருமையும் விரும்பி மனிதர் சாட்சியாகக்
காக்கப்படுவதன்று. எங்குமுள்ள இறைவனைச் சாட்சியாக வைத்து
உள்ளும், புறம்பும், எஞ்ஞான்றும், எவ்விடத்தும் ஒன்று போலவே
பாதுகாக்கத்தக்கது.

     11. சிற்றின்பம் சிறிது; பேரின்பம் பெரிது. இறைவனிடத்தே பதிந்த
அன்புக்காகச் சிற்றின்பந் துறந்தவர் என்று மழியாப் பேரின்ப மடைகுவர்.

          2. திருநீலகண்ட நாயனார் புராணம் முற்றும்.