| 624 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
போற்றி போற்றி,
சிலையா லன்றெயி லெரித்த சிவனே போற்றித்
திருமூலட்டானனே போற்றி போற்றி முதலிய திவாரூர்த்
திருத்தாண்டகங்களிற் புரமெரித்த ஞான்று வேத இருதயத்தில் விளங்கிய
சிவனையே திருவாரூர்த் திருமூலட்டானத் தெழுந்தருளி யிருந்தாராக அப்பர்
பெருமான் போற்றியிருத்தல் காண்க. திரிபுரமெரித்த வரலாறு மாபுராணங்கள்
கூறும்.
குன்ற வார்சிலை நாண ராவரி வாளி கூரெரி
காற்றின் மும்மதில்,
வென்றவா றெங்ஙனே என்ற திருவாமாத்தூர் - (பண் - சீகாமரம்)
ஆளுடைய பிள்ளையார் தேவாரமும், ஈரம்பு கண்டில மேகம்பர் தங்கையில்,
ஓரம்பே முப்புர முந்தீபற, ஒன்றும் பெருமிகை யுந்தீபற, தச்சு விடுத்தலுந்
தாமடி யிட்டலும், அச்சு முறிந்ததென் றுந்தீபற, அழிந்தன முப்புர முந்தீபற
என்ற திருவாசகங்களும் காண்க. நாணென்றா னஞ்சிருக்கு நற்சாபங்
கற்சாபம், பாணந்தான் மண்டின்ற பாணமே - தாணுவே, சீராரு மாரூர்ச்
சிவனேநீ யெப்படியோ, நேரார் புரமெரித்த நேர் என்று பின்னாட் புலவர்
பாராட்டியதும் காண்க. அச்சு முறிந்த தேராதலின் நின்றார்
என்ற சுவையும்
காணத்தக்கது. இருந்த என்றதனால் தேரில் நிற்பதற்கு
முன்னமே ஆரூரில்
எழுந்தருளியவர் என்பதும் குறிப்பு. இது திருவாரூரில் பழமை காட்டும்.
புரமெரித்த முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே
என்ற திருத்தாண்டகமும் சிந்திக்க.
நிகர் ஒன்று இல்லாதார் - சகல சாத்திரங்களின்
உள்ளுறையுண்மை
அடியார் பணியேயாம் என்றதைக் காட்டும் திருத்தொண்டத் தொகையை
உலகுக்கு உபகரிக்க வந்தவர் ஆதலின் நிகரில்லார் தனக்கு
நிகரில்லாத -
உவமனில்லாத இறைவனை அடைந்தாராதலின் தமக்கு நிகர்
ஒன்றில்லாதாராயினர் என்றலுமாம். ஒன்று - ஒன்றாலும் - முற்றும்மை
தொக்கது. 6
| 497.
|
திருவார்
பெருமை திகழ்கின்ற தேவா சிரிய
னிடைப்பொலிந்து |
|
| |
மருவா
நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது
வந்தணையா
தொருவா றொதுங்கும் வன்றொண்டன் புறகென்
றுரைப்பச்
சிவனருளாற்
பெருகா நின்ற பெரும்பேறு பெற்றார்; மற்றும்
பெறநின்றார்,
|
7 |
| 498.
|
சேணார்
மேருச் சிலைவளைத்த சிவனா ரடியார்
திருக்கூட்டம் |
|
| |
பேணா
தேகு மூரனுக்கும் பிரானாந் தன்மைப்
பிறைசூடிப்
பூணா ரரவம் புனைந்தார்க்கும் புற கென்
றுரைப்ப
மற்றவர்பாற்
கோணா வருளைப் பெற்றார்மற் றினியார்
பெருமை
கூறுவார். |
8 |
497.
(இ-ள்.) வெளிப்படை.
அருட்டிரு நிறைந்த பெருமை எந்நாளும்
விளங்குகின்ற தேவாசிரிய மண்டபத்திற் பொலிந்து பொருந்தி வீற்றிருக்கின்ற
சிவனடியார்களைத் தொழுது, அவர்கள்பால் வந்து அணையாமல் ஒரு புறமாக
ஒதுங்கிச் செல்லும் வன்றொண்டன் புறகு என்று உரைப்பதற்குச்
சிவபெருமானருளிற் பெருகுகின்ற பெரிய பேறு பெற்றார் இந்நாயனார்.
அதுவேயுமன்றி மேலும் பெறுதற்கமைந்து நின்றாராகி, 7
498. (இ-ள்.)
வெளிப்படை. சேணிடையிலும் உயர்ந்து நிறைந்த
மேருமலையை வில்லாகவளைத்த சிவபெருமானடியார் திருக்கூட்டம் பேணாது
செல்லும் நம்பியாரூரருக்கும் அவரை ஆண்ட தலைவராந் தன்மையுடைய,
பிறையைச் சிரத்திற் சூடிப் பாம்பை அணியாக அணிந்த பெருமானுக்கும்
புறகு என்றுரைப்ப மற்ற அவர்களிடமே கோணாத அருளைப் பெற்றார்.
இதனின் வேறு பெருமையும் யாவர் சொல்ல வல்லார்? 8
497. (வி-ரை.)
திருவார் பெருமை திகழ்கின்ற தேவாசிரியன்
-
திரு - அருட்டிரு. ஆர் பெருமை -
அடைந்தாரை உய்விக்கவல்ல திருநீறு
- கண்டிகை - பஞ்சாக்கரம் முதலிய சாதனங்களும் இவைபூண்டொழுகும் சீர்
அடியார்களும் எப்போதும் இடையறாது விளங்குதல் குறித்தது. இவை பற்றி
முன்னர்த் திருக்
|
|
|
|