பக்கம் எண் :


1078 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 
840.

அப்பொழு ததனைக் கொண்டு நெற்கொள்வா னவரும்
                                       போக
வொப்பில்குங் குலியங்கொண்டோர்
                         வணிகனுமெதிர்வந்துற்றான்;
"இப்பொதி யென்கொ?" லென்றார்க் குள்ளவா றியம்பக்
                                        கேட்டு
முப்புரி முந்நூன் மார்பர் முகமலர்ந் திதனைச் சொன்னார்.
10
841.

"ஆறுசெஞ் சடைமேல் வைத்த வங்கணர் பூசைக் கேற்ற
நாறுகுங் குலிய மீதே னானின்று பெற்றேன்; நல்ல
பேறுமற் றிதன்மே லுண்டோ? பெறாப்பேறு பெற்று வைத்து
வேறினிக் கொள்வதென்?" னென் றுரைத்தெழும் விருப்பின்
                                         மிக்கார்,
11
842.

"பொன்றரத் தாரு" மென்று புகன்றிட வணிகன் றானு
"மென்றர விசைந்த" தென்னத் தாலியைக் கலய ரீந்தார்;
அன்றவ னதனை வாங்கி யப்பொதி கொடுப்பக் கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார் நிறைந்தெழு களிப்பி
                                       னோடும்.
12

     840. (இ-ள்.) வெளிப்படை. அப்பொழுது அத்தாலியினைக்
கொண்டு நெற்கொள்ளும் பொருட்டு அவரும் போக, ஒப்பற்ற குங்குலியப்
பொதியினைக் கொண்டு ஒரு வணிகன் எதிரே வந்து சேர்ந்தனன்.
"இந்தப்பொதிஎன்ன" என்று கேட்டவருக்கு அவன் உள்ளபடி சொல்ல
அதனைக் கேட்டு முப்புரியாகிய மூன்று நூல் அணிந்த மார்பினையுடைய
அவர் முகமலர்ச்சியுடன் பின்வருமாறு சொல்வாராயினர். 10

     841. (இ-ள்.) வெளிப்படை. "கங்கையைச் சிவந்த சடையின்
மேல்வைத்த அங்கணருடைய பூசைக் கேற்றதான நறுமணமுள்ள குங்குலியம்
இதுவானால், நான் பெரும்பேறு இன்று பெற்றவனாயினேன்; இதன் மேலும்
நல்லபேறு வேறுண்டோ?; பெறுதற்கரிய இப்பேற்றினைப் பெற்று வைத்தும்,
இனி வேறு கொள்ளத்தக்கது என்ன உளது? " என்று எழுகின்ற விருப்பத்தில்
மிகுந்தவராகி,

     842. (இ-ள்.) வெளிப்படை. "நான் உமக்குப் பொன்னைத்தர நீர்
இக்குங்குலியத்தினைத்தாரும்" என்று கலயர் சொல்ல, வணிகனும் "தேவரீர்
எதனைக் கொடுக்க இசைந்தீர்?" என்றான்;' கலயர் தாலியை ஈந்தனர்;
அப்போதே அவன் அதனை வாங்கிக்கொண்டு அந்தப் பொதியைக்
கொடுத்தான். அதனைப் பெற்றுக்கொண்ட கலயர் அங்குச் சிறிதும் நில்லாமல்
உள்ள நிறைந்த பெருமகிழ்ச்சியுடன் விரைந்து சென்றனர். 12

     இம்மூன்று பாட்டுககளும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

     840. (வி-ரை.) அவரும் நெற்கொள்வான் - போக - என்க.
கொள்வான் - கொள்ளும் பொருட்டு. வானீற்று வினையெச்சம்.

     ஒப்பில் - ஒப்பற்ற தன்மையாவது இன்று அது கொண்டதனால்
விளையும் பயன் குறித்தது.

     ஓர் வணிகன் - குங்குலியமும் ஒப்பற்றது. அதனைக் கொணர்ந்தவனும்
ஒப்பற்றவன் என்பார் ஓர் என்றார். இறைவனே இவ்வாறு எழுந்தருளினனோ
என்பதும் குறிப்பு. "திருத்தொண்டர் ஒருவர்" என்ற காரைக்காலம்மையார்
புராணத்(17)திலும் இக்குறிப்புக் காண்க.

     என்றார்க்கு - என்று கேட்டாராகிய அவருக்கு. மார்பர் - கேட்ட
அந்த மார்பர் என அகரச்சுட்டு வருவிக்க. முப்புரிமுந்நூல் - 835 பார்க்க.
மக்களும் (838) மைந்தரும் (839) என்றமையால் மூன்று இழைநூல் மூன்று
அணிந்தவர் என்க.

     முகமலர்ந்து - முகமலர்ச்சி அகமலர்ச்சியாலாகிய மெய்ப்பாடு.
அகமகிழ்வின் காரணம் நாயனார் திருவாக்கில் வைத்து ஆசிரியர்
கூறுகின்றார். "அடுத்தது காட்டும்