பக்கம் எண் :


1249

 
மும்மையாலுலகாண்ட சருக்கம்
 

திருச்சிற்றம்பலம்

மும்மையா லுலகாண்ட மூர்த்திக்கு மடியேன்;
     முருகனுக்கு, முருத்திர பசுபதிக்கு மடியேன்;
செம்மையே திருநாளைப் போவார்க்கு மடியேன்;
     றிருக்குறிப்புத் தொண்டர்தம் மடியார்க்கு மடியேன்;
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
     வெகுண்டெழுந்த தாதைதாண் மழுவினா லெறிந்த
வம்மையா னடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்;
     ஆரூர னாரூரி லம்மானுக் காளே.
 

                                - திருத்தொண்டத்தொகை - (3)


     தாதையை - என்பதும் பாடம்.