|
ஆணை
செலுத்தும் ஆற்றால் - நிலங்காவல் பூண்டு அரசு
செலுத்தும் கருத்துக்கொண்டு ஒரு நாட்டின்மேற் படை எடுத்துவரும்
வேற்று நாட்டரசர் வெற்றி கொண்டால் "பகைத்தவர் சின்னமும் பணிந்தவர்
திறையும்" கொண்டு செல்வது பெருவழக்கு. இவன் அவ்வாறன்றி வலிந்து
நிலம் கொள்ளும் ஆசையாற் போந்தவனாதலின் இங்குத் தங்கி
நிலங்காவலைத் தானே மேற்கொண்டு அரசாளத் தொடங்கினான் என்பது.
வீரஞ்சிந்தச் செருவென்றாயினும் தமிழ்நாட்டைத் தமிழரசனே ஆணை
செலுத்தவைத்துத் தன் வெற்றிக்கடையாளமாகத் திறை கொண்டு
செல்லவேண்டிய வடுகக்கருநாட மன்னன், வலிந்து நிலங்கொள்வான்
-
வந்தான் என முன்னர்க் கூறிய கருத்தும் இது. செலுத்தும்
மாற்றால் -
என்று கொண்டு போரின் நேர்முறைக்கு மாறுபட்ட வழியினால்
என்றுரைக்க வைத்த குறிப்பும் காண்க. "அரசிறைஞ்ச வீற்றிருந்து,
கொங்கரொடு குடபுலத்துக் கோமன்னர் திறை கொணர" (11), "முறைபாயுந்
தனித்திகிரி முறைநில்லா முரணரசர், உறையரண முளவாகிற்
றெரிந்துரைப்பீர்" (14) என்ற புகழ்ச் சோழனார் புராணமும், பிறவும் காண்க.
சோழ அரசர்கள் இமயமலையிற் புலிக் கொடி நாட்டி, வடநாடு வென்று,
கீழ்ப்படுத்திய காலத்தில் அவ்வாறே முறை செய்த முறையும், இந்நாள் நமது
ஆங்கிலேய அரசர் பற்பல நாட்டுப் பழமன்னவர்களையும் அங்கங்கும்
வைத்தே ஆண்டுவரும் முறையும் இங்குக் கருதத்தக்கன.
மதுராபுரி
காவல் கொண்டான் - மதுரையைத் தனது தலைநகராகக்
கைக்கொண்டு அரசு வீற்றிருக்கலாயினான்.
12
980.
|
வல்லாண்மையின்
வண்டமிழ் நாடு வளம்ப டுத்து
நில்லாநிலை யொன்றிய வின்மையி னீண்ட மேரு
வில்லானடி மைத்திற மேவிய நீற்றின் சார்பு
செல்லாதரு கந்தர் திறத்தினிற் சிந்தை தாழ்ந்தான்.
13 |
(இ-ள்.)
வெளிப்படை. வலிய ஆண்மையினால், வன்மையுடைய
தமிழ் நாட்டை வளம்படுத்தி நில்லாத நிலைமை பொருந்திய
இல்லாமையாலே, (அம்மன்னவன்), நீண்ட மேருவை வில்லாகவுடைய
சிவபெருமானது அடிமைத்திறம் பொருந்திய திருநீற்றுச் சார்பில் செல்லாது
சமணர்களது திறத்திலே சிந்தை தாழ்ந்தனன்.
(வி-ரை.)
வல் ஆண்மையின் - படைகொண்டு வலிந்து நிலங்
கொண்டபடியே அந்த வலிய படை ஆண்மையின் துணையினால். நீதி
முறைவழியாலன்றி - குடிகளின் மன அமைதியின் துணையாலன்றி -
என்பது குறிப்பு.
வண்
தமிழ்நாடு வளம்படுத்து - வன்மையுடைய தமிழ் என்றும்,
வண்மையுடைய நாடு என்றும் கூட்டியுரைக்க நின்றது. தமிழின்
வண்மையாவது தன்னை வேண்டிப் பயின்றோர்க்குத் தக்க உண்மைப்
பொருளின்பங்களை வேண்டியவாறே வரைவில்லாது வழங்குதல். நாட்டின்
வண்மையாவது நாடாது வளந்தருதல், "நாடென்ப நாடா வளத்தது" - குறள்.
வளம்படுத்தலாவது நாட்டின் இயற்கை வளங்களைச்
செயற்கையாற்
பெருகச் செய்து மேலும் மக்களுக்குப் பயன் தரும்படி செய்தல். இவ்வாறு
நாடு வளம்படுத்துதல் அரசாங்கக் கடமைகளில் ஒன்று . அவை காடுவெட்டி
நாடுதிருத்துதல், வாய்க்கால் வெட்டிப் பயிர்பெருக்குதல் முதலாயின.
வளம்படுத்தியும் (அந்தப் பயனைத் தான்
பெறமாட்டானாய்த்) தாழ்ந்தான்
என்க.
மீண்டும்
நாடுபிடித்தாண்டனன் என்றும், களப்ரன் நீண்டகாலம்
ஆட்சி செய்திருக்கவில்லை என்றும், அவனே இவ்வடுகக் கருநாட
மன்னனாயிருக்கலாமென்றும் சில சரித ஆராய்ச்சியாளர் கருதுகின்றார்கள்.
இதில் ஐயங்கொள்வாருமுண்டு.
|