பக்கம் எண் :


மூர்த்திநாயனார்புராணம்1277

 

     989. (இ-ள்.) வெளிப்படை. "ஐயனே! அன்பின் துணிவினால்
இக்காரியம் செய்யற்க. உன்பால் வலியக் கொடுமை விளைத்தவன்
வலிந்துகொண்ட நாடு முழுமையும் நீ கொண்டு, முன்பு புகுந்த துன்பங்கள்
முழுமையும் போக்கிக் காத்துப், பின்பு உனது நியதியாகிய திருப்பணி
செய்து, முடிவில் நமது பேருலகத்திற் சேர்வாயாக!" என்று சொல்ல, 22

     990. (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு எழுந்ததனைக் கேட்டு,
எழுந்து, பயந்து, முன் செய்த செயலினை நிறுத்தவே, தேய்ந்த புண்ணாகிய
ஊறு நீங்கி, நன்மணமெல்லாம் கலந்து பொருந்த அவரது கையின்
வண்ணங்கள் அழகாய் நிரம்பின; மூர்த்தியாரும் ஒன்றுகூடிப் பொருந்திய
விளக்கமாகியதோர் ஒளியினைப் பொருந்தினர். 23

     இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.

     988. (வி-ரை.) கல்லின்புறம் - கல் - "வட்டந்திகழ்பாறை" என்று
மேற்பாட்டிற் கூறிய சந்தனம் அரைக்கும் கல். புறம் - மேல். ஏழுனுருபு.

     சோரிகலுழ்ந்து என்க. கலுழ்தல் - பெருகி வெளியிற் சொரிதல்.

     செல்லும் பரப்பு - தேய்த்த கை பரவிச் செல்கின்ற இடம்.

     என்புதிறந்து மூளை புல்லும்படி - முழங்கையினுள் தட்டையாகிய
நீண்ட இரண்டு எலும்புகள் உண்டு. அவை உள் துளையுடையனவாகிய
மெல்லிய குழாய் போன்ற அமைப்புடையன. அத்துளைக்குள் மூளைச்
சத்தாகிய மெல்லிய நுண்ணிய நரம்புத் தன்மையுடைய உடற்கூறு
நிரம்பியிருக்கும். அதனை உள்ளே வைத்துப் பொதிந்து காக்கும்பொருட்டு,
மூளையைத் தலைமண்டை எலும்பு ஓடு காவல் செய்வது போல,
அமைந்துள்ளன இவ்வெலும்புக் குழாய்கள். எலும்புகளின் மேற்பாகமான
கடினமாகிய வெள்ளியபகுதி தேய்ந்தால் குழாய் திறக்கப்பட்டு
உள்ளிருக்கும் மூளைப்பகுதி வெளிப்படும். அவ்வாறு மெல்லிய எலும்பு
தேய்ந்து வாய்திறந்து உள்ளிருக்கும் மூளைச் சத்து வெளித்தோற்றித்்
தேயும்படி என்க.

     பொறுத்திலர் தம்பிரானார் - "தரித்திலர் தேவதேவர்" (826),
"தரிப்பரேயவள் தனிப்பெருங் கணவர்" (திருக்குறிப்பு - புரா - 57)
முதலியவை காண்க. யான் என்றும், எனது என்றும் உள்ள அகங்கார
மமகாரங்களாகிய பற்றுக்கள் ஒரு சிறிதேனும் உள்ளவரையில் பொறுத்துப்
பார்ப்பதும், அவை முற்றும்விட்டு ஒழிந்து உடற்பற்றும் உயிர்ப்பற்றும்
அறவே நீங்கியபோது பொறுக்காமல் வெளிப்பட்டு அருளுதலும்
இறைவனுடைய அருளின்றிறம். "அற்றது பற்றெனில் உற்றது வீடு" என்பது
பழையமொழி. (வீடு என்பது திருவருள் வியாபகத்தில் தாடலைபோல்
அடங்கி நிற்றல்). பயனிலை முன்வந்தது. விரைவு குறித்தது.

     அருள்செய்த வாக்கு எழுந்தது என்க. வாக்கின்றிறம் வரும்பாட்டிற்
கூறுகின்றார். அருள்செய்த - மூர்த்தியாருக்கு அருளைப்புரிந்த. உவந்து
அருள்செய்த
என்றலுமாம். இறைவனது அருவத் திருமேனியாகிய எங்கும்
நிறைந்த ஞானாகாயத்தினிடமாக மூர்த்தியார் கேட்கும்படி எழுந்தது
என்றபடி. 401, 436, 465, 597. 598, 923, 965 முதலியவையும், இன்னும்
இவ்வாறு வருவனவும் பார்க்க.

     வந்து எழுந்தது - அரிவாட்டாயனாருக்கு நிலத்தின் பிளப்பாகிய
கமரினின்றும் திருக்குறிப்புத் தொண்டனாருக்குக் கந்தை புடைத்திட
ஏற்றுகின்ற கற்பாறையினின்றும், கண்ணப்பனாருக்குச் சிவலிங்கத்தினின்றும்
இறைவருடைய அருளும் திருக்கை வெளிப்பட்டருளியதுபோல், இங்கு
வாக்கு எழுந்து அருளியது என்பதாம். எழுந்த (தாகிய) வாக்கு (988) -
என்ன (989) - இவ்வண்ணம் எழுந்தது கேட்டு, ஒழிந்திட - ஊறுநீங்கி -
நிரம்பின; மூர்த்தியார் - ஒளி எய்தினர் (990) என்று கூட்டி முடித்துக்
கொள்க. எழுந்தது - வினையாலணையும் பெயர். 21