பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1543

 

கழுவாயில்லாத சிவாபராதத்தினுக்கும் திருவருளால் குற்றத்தீர்வு தருதலால்
அந்த மழு தலம் ஏறியதாயிற்று.
தந்தையை எறிந்த பாதகமே முத்திக்குக்
காரணமாயின நன்மையும் குறிப்பு. தாளிரண்டும் - "இருதாளும் துணித்த"
(1257) என்றது விரிநூல். ஒருதானே குடத்தைச் சிந்தவும், இரு தாள்களையும்
துணித்த தகுதி பற்றிப் பின் 1257-ல் உரைப்பவை பார்க்க. நன்னிதி -
சிவபூசைப்பயனாகிய கிடையாச் செல்வம் கிடைப்பிக்கும் தன்மைபற்றி
இவ்வாறு சிறப்பித்தார்.

     சரித வரலாறும் பெயரும் தொகைநூல் தொகுத்துக் கூறிற்று. ஊரும்
பேரும் சரித வரலாறும் பண்பும் வகைநூல் வகுத்துக் காட்டிற்று. இவை
விரிந்தபடி விரிநூலுட் காண்க.

     1206. (இ-ள்.) வெளிப்படை. அழகிய குளிர்ச்சியுடைய காவிரி,
எந்நாளினும் பொய்க்காமல் நீர்தரும், நீர்நாடாகிய சோழவளநாட்டில்,
வாய்ப்புடைய மண்ணியாற்றின் தென்கரையில், நிலைபெறும்படி, முன்னாளில்
கிரவுஞ்சமலை பிளக்குமாறு ஏந்திய கூரிய வேலினது நிலைபெற்ற
தன்மையைக் காட்டிப், பின்பு, தேவர்களது கொடிய பகையாகிய சூரர்களைச்
செயிக்க நின்ற, முருகனாணையினால் அளிக்கப்பட்ட திருமறையோர்கள்
நெருங்கிய பழைய ஊர் செல்வ நிறைந்த சேய்ஞலூர் என்பதாகும்.

     1206. (வி-ரை.) பூந் தண் பொன்னி - பூ - அழகு. அழகு
காவிரியின் இயல்பு; கரடுமுரடாயும், மலையின் வீழருவிகள் போலக்
கடிதாயும் ஓடாது மெல்லியதாய்ப்பரந்து செல்லுதலும் செல்லுமிடமெல்லாம்
அழகு செய்தலுமாம்.

     எந்நாளும் பொய்யாது அளிக்கும் - எந்நாளும் - மழையில்லாத
காலத்தும் முதுவேனிற் காலத்தும். உம்மை உயர்வு சிறப்பு. பொய்யா
தளித்தலாவது
சுருங்கி வறண்டுபோகாது நீர் தருதலும் பருவந் தவிராது நீர்
தருதலுமாம். "வான் பொய்யினுந் தான்பொய்யா" (பட்டினப்பாலை - 5).
"தவாநீர்க் காவிரிப்பாவை" (மணிமே).

     வாய்ந்த மண்ணி - மண்ணி - கொள்ளிடத்திலிருந்து பிரிந்துவரும்
கிளையாறு. இது பல காலங்களில் பல வழிகளில் ஓடிச் சென்றது. பழ
மண்ணிப்படிக் கரை
முதலியவற்றின் வரலாறுகள் காண்க. இவ்வாறே
காவிரியும் மாறிச்செல்லும் வழிகளுடையதென்பதுபற்றிப் பழங் காவிரி
முதலிய வரலாறுகளும் கருதுக. வாய்ந்த - காவிரி பாயும் நாட்டில்
வடிகாலாகிய கொள்ளிடத்தினின்றும் பிரிந்து வந்து கூடிய. வாய்த்தல் -
ஏற்றவாறு பொருந்துதல்.

     மன்ன - அன்றுமுத லின்றுவரையும் இனிமேலும் நிலைபெறும்படியாக.

     முன்னாள் - காட்டி - முருகப்பெருமான் சூரசங்காரத்தின்
பொருட்டுத் தேவர் சேனைகளுடன் கயிலையினின்றும் தென்றிசையில்
வருங்காலத்து இடையில் குறுக்கிட்டு எதிர்த்த மாயமலையாகிய
கிரவுஞ்சமலையை வேலாயுதத்தினாற் பிளந்து தாரகாசுரனையும்
வதைத்தருளினர் என்ற சரிதம் கந்தபுராணத்துள் விரிவாய்க் காணத்தக்கது.
முன்னாள் - தென்றிசையிற் போந்து சேய்ஞலூரை யுளதாக்குதலுக்கு
முன்னாளிலே. வரை - கிரவுஞ்சம் என்னும் மாயமலை. "குன்றமெறிந்த
வேலவன்" (1158), "வரையுரங்கிழித்த திண்மை அயில்" (661) என்ற
விடங்களிலுரைத்தவையும் பார்க்க. வரைகிழிய என்றதனால் அதனை
இருப்பிடமாக்கொண்டு அதனுள் இருந்து மாயஞ் செய்த தாரகாசுரனைக்
கொன்றதும் உடன்கொள்க.

     ஏந்தும் அயில் வேல் நிலைகாட்டி - வேற்படை வெல்லும் என்ற
நிலையினை விளக்கிக்காட்டி. ஞான வேற்படையின் சத்தியினை நாட்டிக்
காட்டுதலே பொருளன்றித் தாரகனை வதைத்தல் ஒரு பொருளன்று என்ற
குறிப்புப்பட, வேலால் வரை கிழித்த சேந்தன் என்னாது, வரை கிழிய ஏந்தும்
வேல் நிலைகாட்டி - என்ற நயமும் காண்க.