இலைமலிந்த
வேனம்பி யெறிபத்தர்க் கடியேன்;
ஏனாதி நாதன்ற னடியார்க்கு மடியேன்;
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்;
கடவூரிற் கலையன்ற னடியார்க்கு மடியேன்;
மலைமலிந்த தோள்வள்ளன் மானக்கஞ் சாற
னெஞ்சாத வாட்டாய னடியார்க்கு மடியேன்;
அலைமலிந்த புனன்மங்கை யானாயர்க் கடியேன்;
ஆரூர னாரூரி லம்மானுக் காளே.
திருத்தொண்டத்தொகை
- (2)
|