பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்300

     திருவமுதூட்டினார். இவ்வாறு அடுத்த திருத்தொண்டு பின்னரும் பலநாள்
செய்திருந்து இறைவரது திருவடி நிழற்கீழ் அடியாருடன் கலந்தனர்.
 

     கற்பனை: 1. தொன்மரபில் தத்தமக்கு உரிய ஒழுக்கத்தில் நின்று மனையற நெறி
நிற்கும் குடிகளை யுடையது நகரின் சிறப்பு. (4012)
 
     2. சிவன் கழற்காதலுடனே வளர்தல் முன்னைத் தவமுடையார்க்கே யாகும் (4013).
 
     3. சிவன் கழற்கே செய்யும் தொண்டினையே பற்றி, மற்றோர் பற்றில்லாத நிலையிற் பணிசெய்தல் வீடு தருவதாம் (4013).
 
     4. சிவன் அடியார்களை அழுது செய்வித்தற்கண் நூல்களில் விதித்த நெறி தவறாது மனமகிழ்ச்சியுடன் செய்தல் வேண்டும் . (4014).
 
     5. சிவனடியார் திருவேடங் கண்டாற் சிவனாகவே கண்டு வணங்கிப் பணி செய்தலன்றி அவரது முன்னைநிலை முதலிய செய்திகளைப் பற்றி யெண்ணலாகாது. (4018 - 4019)
 
     6. அவ்வாறு முன்னை நிலைபற்றி எண்ணுவது சிவாபராதம். அஃது உரியபடி தண்டித்துக் குற்ற நீக்கற்பாலது (4019).
 
     7. மனைவியார் செய்த சிவாபராதத்துக்காக அவர் கையினைத் தடிந்த கலிக்கம்ப
நாயனார் அதுபற்றித் துளக்கமில்லாத சிந்தையுடன் திருத்தொண்டு செய்திருந்தனர். இது
சிவனையன்றி மற்றோர் பற்றுமில்லாத பெரியோர் நிலை (4020). சண்டீசர் புராணமும்,
பிறவும் பார்க்க.
 
     தலவிசேடம் :- திருப்பெண்ணாகடம் - திருத்தூங்கானை மாடம் - III -
பக்கம் 211 பார்க்க.

கலிக்கம்ப நாயனார் புராணம் முற்றும்.