பக்கம் எண் :

 11


திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய தேவாரம்
முதல் திருமுறை

தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின்
அருட்கொடை

தருமை ஆதீன மடாலயம்,
தருமபுரம்.

கி.பி.16 ஆம் நூற்றாண்டில் திருக்கயிலாய பரம்பரையில் ஸ்ரீகமலை ஞானப்பிரகாச தேசிகரிடம் உபதேசம்பெற்ற ஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளால் தோற்றுவிக்கப் பெற்றது தருமை ஆதீனம்.

வேளூர், சீகாழி, திருக்கடவூர், திருபுவனம், திருவையாறு முதலிய இருபத்தேழு திருக்கோயில்களைப் பரிபாலிப்பதோடு, கல்வி, சமயம், சமூகம் முதலிய பல்வேறு தொண்டுகளையும் இவ்வாதீனம் இயற்றி வருகிறது. மன்னர்களும், மக்களும் அளித்த நிலபுலன்களின் வருவாயில் பல நல்லறப் பணிகளை இவ்வாதீனம் இயற்றி வருவதோடு, சைவ சமய உண்மைகளையும் ஒழுக்கங்களையும் மக்களுக்கு அறிவுறுத்தி அவர்களை நன்னெறிப்படுத்தும் நற்பணிகளைச் செய்து வருகிறது. (முறையான திருமுறைப் பயிற்சியும், பண்ணொன்றத் திருமுறைகளைப் பாடும் இசை நலமும், திருமுறைகளில் ஆழ்ந்து தெளிந்த மெய்ஞ்ஞானமும் வாய்க்கப் பெற்றவர்களாய்,)

இவ்வாதீனத்தின் ஞானபீடத்தில்
26 ஆவது குருமகாசந்நிதானமாக விளங்குபவர்கள்
ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
ஆவார்கள்.

இவர்கள் மடாலய பரிபாலனத்துடன் தம் ஆதி குருநாதர் திருப்பெயரால், ஞானசம்பந்தம் பதிப்பகம், ஸ்ரீ குருஞானசம்பந்தர் பணி மன்றம் ஆகியவற்றை நிறுவி அருட்பணி புரிந்து வருகிறார்கள். தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் அருட்கொடையால் இத்திருமுறை வெளியிடப் பெறுகிறது.

______________

குறிப்பு: இத்திருமுறைப் பதிப்பின் விற்பனைத் தொகை மீண்டும் இத்திருமுறையைத் தொடர்ந்து வெளியிடப் பயன்படுத்தப் பெறும்.