1372. புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே
புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே
புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே
புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே. 3
1373. விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
_________________________________________________
வாயும், பெரிதாயும் உள்ள
திருச்சிலம்பினைத் தரித்துள்ளவன். நூபுரம்
எனற்பாலது நுபுரம் எனக் குறுகிநின்றது. விஷ்ணுவின்
புறனுரையாகிய சிவதூஷணத்தை அரசமரத்தினீழலில்
அவனுடன் இருந்து விரும்பியுள்ள முப்புரங்களைச்
சங்கரித் துள்ளவன். அண்ணி எனற்பாலது அணி என
இடைக்குறையாய் நின்றது. தேவர்கள் கற்பகப்
பூஞ்சோலை மலர்களால் அர்ச்சிக்கப் படுகின்ற
தேவேந்திரனுடைய. எணு எனற்பாலது ஏணு என நீண்டது.
புரந்தரன் எனற்பாலது புரத்தரன் என வலித்து
நின்றது. இதழ்கள் விண்டு மலர்கின்ற சோலை
சூழ்ந்த சீகாழிப்பதிக்குக் கர்த்தாவாயுள்ளவன்.
தேவேந்திரன் மூங்கில் வழியாகவந்து பூசித்ததால்
வேணுபுரம் என்னும் பெயர்பெற்றது. சிலம்பினைத்
தரித்துள்ளவரும், முப்புரத்தை எரித்தவரும்,
தேவேந்திரனுடைய சோலைசூழ்ந்த வேணுபுரத்தில்
வீற்றிருக்கும் இறைவர் எனக் கூட்டி உரைத்துக்
கொள்க.
3. கு-ரை: இதயகமலத்திலிருந்து
இடையறாத ஆனந்தம் பொழியப்பட்டு என்னை
மலபோதத்தில் தள்ளாமல் எனக்கு அடைக்கலப்
பொருளாயுள்ளவன். ஆன்மாக்களுக்கு இரக்ஷையாக
முண்டம்போலிருந்த திருநீற்றை அணியப்பட்ட
மிக்க கருணையானவனே யான்பாடும் பாடலை
உவந்துள்ளவன். புலிக்காலும் புலிக்கையும்
பெற்றுள்ள வியாக்கிரபாத முனிவருக்கு
ஞானானந்தமாகிய நாடகத்தைக் கனகசபையிலே
ஆடல்செய்யும் பரத வித்தையைக் கற்றுள்ளான்.
வியம் எனற்பாலது விய எனக் கடைகுறைந்து நின்றது.
கீழ்ச்சொன்ன லீலைகளெல்லாம் செய்கின்ற
சிவன் தனது இச்சையால் பொருந்தியிருக்கும்
ஊர்பிரமா பூசித்த புகலி என்னும் திருப்பதி.
4. கு-ரை: கன்று குணிலாக எறிந்து
விளவின் கனியைக் கொண்ட நாரணனைப்
பிரகாசஞ்செய்யப்பட்டு நின்மலமாயிருந்துள்ள தனது
பெரிய திருமேனியிலே ஒன்று பாதியாக வைத்துள்ளான்
|