திருமுறை கண்ட புராணம்
சேடர்மலி காழிநகர் வேந்தர் தாமுந்
தேவர்புகழ் திருத்தோணிச் சிவனார் பங்கிற்
பீடுடைய வுமைமுலைப்பா லருளா லுண்டு
பிஞ்ஞகனைச் சினவிடைமேற் பெருகக் கண்டு
தோடுடைய செவியன்முதற் கல்லூ ரென்னுந்
தொடைமுடிவாப் பரசமயத் தொகைகண்
மாளப்
பாடினார் பதிகங்கள் பாவி
லொன்றாம்
பதினாறா விரமுளதாப் பகரு மன்றே.
- உமாபதி சிவசாரியார்.
|