ஆய்வார் பதிபசு பாசத்தின் உண்மையை
ஆய்ந்தறிந்து
காய்வார் பிரபஞ்ச
வாழ்க்கையெல் லாங்கல்வி
கேள்வியல்லல்
ஓய்வார் சிவானந்த வாரியுள் ளேயொன்
றிரண்டுமறத்
தோய்வார் கமலையுள்
ஞானப்ர காசன்மெய்த்
தொண்டர்களே.
ஆசையறாய் பாசம்விடாய்
ஆனசிவ பூசைபண்ணாய்
நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய் - சீசீ
சினமே தவிராய் திருமுறைகள்
ஓதாய்
மனமே உனக்கென்ன வாய்.
-ஸ்ரீ குருஞான சம்பந்தர்.
|