பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்199


ஆதித்தேசுவரமுடைய மகாதேவர்1, கோயில்களும் தனித்து இருந்தனவாக அறியப்படுகின்றன. உத்தமசோழ விண்ணகரம் என்ற விஷ்ணு ஆலயமும் குறிக்கப்பெறுகின்றது2.

இவையன்றித் திருநல்லமுடையார்கோயில் தெற்குப் பக்கத்துப் பிராகாரத்தில் புகழாபரண மண்டபம் என்ற ஒன்று இருந்ததாகவும், அதில் பிள்ளையாரைப் பிரதிட்டைசெய்யக் குலோத்துங்கன் III காலத்தில் நிலம் அளிக்கப்பெற்றது என்றும் வரலாறு விளக்குகின்றது3. திட்டைவிழுமியான் பிள்ளையடியாரால் சண்டேசுவரர் கோயில் திருப்பணி செய்விக்கப் பெற்றது4. ஆதனூர் விஜயநட்டரையனான அருமொழித் தேவனால் திருநடைமாளிகை கட்டப்பெற்றது.

ஏனைய கல்வெட்டுக்கள் திருமஞ்சனத்திற்கும், பூமாலைக்கும், நந்தவனத்திற்கும், அமுதுக்கும், விளக்கிற்கும் செய்த பணிகளை அறிவிப்பன. இத்தலத்தால் தெரியும் அரசர்களும், தண்டத் தலைவர்களும், அரசகாரியம் பார்ப்பாரும், வெற்றிக் குறிப்புக்களும் பல.

73. திருவடுகூர்
(திரு ஆண்டார் கோயில்)

நடுநாட்டுத்தலம். விழுப்புரம் - பாண்டிச்சேரி (கோலியனூர் - கண்டமங்கலம் வழி) பேருந்து வழியில் உள்ளது. வடுகனாகிய வைரவர் பூசித்துப் பேறுபெற்றதாதலின் இப்பெயர் எய்தியது. தற்காலம் ஆண்டார்கோயில் என வழங்குகிறது.

இறைவன் பெயர் வடுகூர்நாதர். இறைவியின் பெயர் வடுவகிர்க்கண்ணியம்மை. தீர்த்தம் பெண்ணைநதி.

74. திருஆப்பனூர்

பாண்டிய நாட்டுத்தலம். மதுரையிலிருந்து பேருந்துகளில் செல்லலாம். தற்பொழுது திரு ஆப்புடையார் கோயில் எனவழங்கப் பெறுகிறது. சோழாந்தகன் என்னும் பாண்டியமன்னன் பொருட்டுச்

____________

1 644 of 1909, 2 655 of 1909, 3 662 of 1909, 4 658 of 1909