பக்கம் எண் :

334திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


9. திருவேணுபுரம்

பதிக வரலாறு:

மயிலையில் பூம்பாவையை உயிர்ப்பித்த பிள்ளையார், திருவான்மியூர், இடைச்சுரம், கழுக்குன்றம், அச்சிறுபாக்கம், அரசிலி புறவார் பனங்காட்டூர் ஆகிய தலங்களை வழிபட்டு, நற்றவர் குழாத்தோடும், ஆனந்த நடராஜர் ஞானநடஞ்செயும் தில்லையம்பதியின் எல்லையில் வணங்கிக்கொண்டு, திருக்கழுமலம் சென்றடைந்து, சீகாழிப் பதியைத் தூரத்தே கண்டதும், பல்லக்கை விட்டிறங்கி, ‘வண்டார் குழல் அரிவை‘ என்னும் இப்பதிகத்தைப் பாடியருளுகிறார்.

பண்:நட்டபாடை

பதிக எண்: 9

திருச்சிற்றம்பலம்

87. வண்டார்குழ லரிவையொடு

பிரியாவகை பாகம்

பெண்டான்மிக வானான்பிறைச்

சென்னிப்பெரு மானூர்

தண்டாமரை மலராளுறை

தவளந்நெடு மாடம்

விண்டாங்குவ போலும்மிகு

வேணுபுர மதுவே. 1

__________________________________________________

இத்திருப்பதிகத்தின் ஒன்று முதல் பத்துப் பாடல்களும் சிவபிரானது ஊர் வேணுபுரம் என உள்ளவாறே பொருள் கொள்ளத்தக்கன. தூரத்தே கண்டதும் பாடினார் என்பதற்கு "வேணுபுரம் அதுவே" என்றதே அகச்சான்றாயிற்று.

1. பொ-ரை: வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய பெண்ணாகிய உமையம்மை, தன்னிற் பிரியாதிருக்கத் தன் திருமேனியில் இடப்பாகத்தை அளித்து, அப்பாகம் முழுதும் பெண் வடிவானவனும், பிறையணிந்த திருமுடியை உடையவனும் ஆகிய பெருமானது ஊர், தாமரை மலரில் விளங்கும் திருமகள் வாழும் வெண்மையான