பக்கம் எண் :

 33. திருஅன்பிலாலந்துறை517


33. திருஅன்பிலாலந்துறை

பதிக வரலாறு:

திருக்கானூரை வணங்கிப் பதிகத்தொண்டு பாலித்துப் போந்த காழிப்பிள்ளையார் அன்பிலாலந்துறைக்கு எழுந்தருளினார்கள். அங்கே ‘முன்னவனைத் தொழுது பதம்நிறை செந்தமிழ்’ பாடினார்கள்.

பண் : தக்கராகம்

பதிக எண்: 33

திருச்சிற்றம்பலம்

349. கணைநீ டெரிமா லரவம் வரைவில்லா
இணையா வெயின்மூன் றுமெரித் தவிறைவர்
பிணைமா மயிலுங் குயில்சேர் மடவன்னம்
அணையும் பொழிலன் பிலாலந் துறையாரே. 1

350. சடையார் சதுரன் முதிரா மதிசூடி
விடையார் கொடியொன் றுடையெந் தைவிமலன்

__________________________________________________

1. பொ-ரை: நீண்டு எரிகின்ற தீயையும் திருமாலையும் அம்பாகக்கொண்டு பூட்டி வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கட்டிய மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களையும் எரித்த இறைவர், தத்தம் பெடைகளோடுகூடிய பெரிய மயில்களும், குயில்களும் சேர்ந்து வாழும் அன்னங்களும் உறையும் பொழில் சூழ்ந்த அன்பிலாலந்துறையார் ஆவார்.

கு-ரை: இது திரிபுரம் எரித்த இறைவர் ஆலந்துறையார் என அறிவிக்கின்றது. நீடு எரி மால் கணை - மேலோங்கி எழுகின்ற தீயையும், திருமாலையும் கணையாகவும். அரவம் வரை வில்லா - வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்ட மேருமலையை வில்லாகவும். இணையா - இணைத்து. பிணை - தத்தம் பெடைகளோடு கூடிய.

2. பொ-ரை: சடைமுடிகளோடு கூடிய சதுரப்பாடு உடையவராய் இளம்பிறையை முடிமிசைச் சூடி இடபக்கொடி ஒன்றை உடைய எந்தையாராகிய விமலர், வேதம் பயிலும் இளஞ்சிறார்கள் கூடியிருந்து