பக்கம் எண் :

 62. திருக்கோளிலி739


மந்திரத்த மறைபாட

வாளவனுக் கீந்தானும்

கொந்தரத்த மதிச்சென்னிக்

கோளிலியெம் பெருமானே. 8

675. நாணமுடை வேதியனும்

நாரணனும் நண்ணவொணாத்

தாணுவெனை யாளுடையான்

தன்னடியார்க் கன்புடைமை

பாணனிசை பத்திமையாற்

பாடுதலும் பரிந்தளித்தான்

கோணலிளம் பிறைச்சென்னிக்

கோளிலியெம் பெருமானே. 9

__________________________________________________

விரலால் சிறிதே ஊன்றிய அளவில், அவன் உடல் நெரிந்து, மந்திரமாக விளங்கும் வேத கீதங்களைப் பாடிப் போற்றச் சந்திரஹாசம் என்னும் வாளை ஈந்து அருள் செய்தவன், கொத்துப் போல இரண்டு முனைகளை உடைய பிறை மதியைச் சூடிய சடையினனாகிய திருக்கோளிலி எம்பெருமானாவான்.

கு-ரை: வானவூர்தியனாகிய இராவணன் கயிலையை எடுத்த காலத்து விரலூன்றி யடர்த்து அவன் சாமகானஞ்செய்ய அருள் செய்தவன் இவன் என்கின்றது. அந்தரம் - ஆகாயம். சுந்தரம் - அழகு. வாள் - சந்திரஹாசம் என்னும் வாள். உம்மை - இசைநிறை. கொன்தரத்த - கொந்த ரத்த எனத் திரிந்தது. பெருமையுடைய என்பது பொருள்.

9. பொ-ரை:ஐந்து தலைகளில் ஒன்றை இழந்ததால் நாணமுற்ற வேதியனாகிய பிரமனும், திருமாலும் அணுக முடியாத நிலைத்த பொருள் ஆனவனும் என்னை அடிமையாக உடையவனும், தன் அடியவர்கட்கு அன்பு வடிவானவனும், பாணபத்திரன் பத்திமையோடு பாடப் பரிவோடு அவனுக்கு அருள் புரிந்தவனுமான வளைந்த பிறை மதியைச் சென்னியில் சூடிய சிவபிரான், திருக்கோளிலி எம்பெருமான் ஆவான்.

கு-ரை: அயனும் மாலும் அறியவொண்ணாத் தாணு, பாண