பக்கம் எண் :

 87. திருவடுகூர்919


ஏம மனத்தாரா யிகழா தெழுந்தொண்டர்
தீப மனத்தார்க ளறியார் தீயவே. 8

934. வண்ண மலரானும் வைய மளந்தானும்
நண்ண லரியானை நல்லூர்ப் பெருமானைத்
தண்ண மலர்தூவித் தாள்க டொழுதேத்த
எண்ணு மடியார்கட் கில்லை யிடுக்கணே. 9

935. பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கியர்
நிச்ச மலர்தூற்ற நின்ற பெருமானை
நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை
எச்சு மடியார்கட் கில்லை யிடர்தானே. 10

____________________________________________________

தவர்களாய் இகழாது அவனைக் காண எழும் தொண்டர்கள், தீபம் போன்ற ஞானஒளி நிலைத்த மனம் உடையவராவர். தீயனவற்றை அவர்கள் அறியார்.

கு-ரை: இராவணனது புகழைக் கெடுத்த பெருமானாகிய நல்லூர்ப் பெருமானைப் புகழுந் தொண்டர், ஒளிமனத்தார்களாய் தீயன அறியார் என்கின்றது. காமன் - மன்மதன். எழில் - எழுச்சி; தருக்கு. நாமம் - புகழ். ஏம மனத்தார் - பாதுகாப்புற்ற மனத்தவர்கள். தீப மனத்தார் - எழுதிய தீபம்போல நிலைத்த மனத்தடியார்கள்.

9. பொ-ரை: செந்தாமரையில் விளங்கும் பிரமனும், உலகை அளந்த திருமாலும், நண்ணுதற்கு அரியவனாய் விளங்கும் நல்லூர்ப் பெருமானை, குளிர்ந்த மலர்களைத்தூவி, அவன் திருவடிகளைத் தொழுது வணங்க எண்ணும் அடியவர்களுக்கு, இடுக்கண் இல்லை.

கு-ரை: அயனும் மாலும் அணுகவும் அரிய பெருமான் திருவடியை மலர்தூவி வணங்கும் அடியார்கட்கு என்றும் துன்பமில்லை என்கின்றது. வண்ணமலரான் - செந்தாமரையில் உள்ள பிரமன். வையம் அளந்தான் - உலகளந்த பெருமாள். தொழுது ஏத்தவும் வேண்டா - எண்ணினாற்போதும் இடுக்கண் இல்லை என்று எளிமை கூறியவாறு.

10. பொ-ரை: மயிற்பீலியாலாகிய குடை நீழலில் திரியும் சமணர்களும், புத்தர்களும் நாள்தோறும் பழி தூற்றுமாறு நின்ற பெருமானாய், நஞ்சு பொருந்திய கண்டத்தை உடைய நல்லூர்ப்