உ
முதல் திருமுறையில் உள்ள
தலங்களின்
வரலாற்றுக்
குறிப்புக்கள்
1. சீகாழி
தலம்:
சோழவள நாட்டில்
காவிரி வடகரையில் அமைந்துள்ள 14 ஆவது தலம். நாகை
மாவட்டத்தில் சீகாழி கோட்டத்தின் தலைநகர்.
மயிலாடுதுறை - சிதம்பரம் இருப்புப்பாதையில் இரயில்
நிலையம், பேருந்து வசதிகள் உள்ள பெரிய ஊர்.
பிரமபுரம், வேணுபுரம்,
புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், புறவம், சண்பை,
காளிபுரம், கொச்சைவயம், கழுமலம், சிரபுரம் என்ற
பன்னிரண்டு திருநாமங்களையுடையது. இவற்றின் பெயர்க்காரணங்களைப்
பதிகம் அறுபத்து மூன்றில் திருஞானசம்பந்த
சுவாமிகளே எடுத்து விளக்கியுள்ளார்கள். அது ‘பல்பெயர்ப்பத்து’
என அமைக்கப்பெற்றுள்ளது. திருக்கழுமல மும்மணிக்கோவையுள்
‘வசையில் காட்சி’ என்னும் செய்யுளில் இப்பன்னிரண்டு
பெயர்களும் பன்னிருயுகத்தில் வழங்கினவாகப் பட்டினத்தடிகளால்
உணர்த்தப் பெறுகின்றது. இவையன்றி, சங்கநிதிபுரம்
முதலாகப் பதினான்கு பெயர்களும் உள்ளனவாகத்
தலபுராணம் சொல்லும்.
விசேடங்கள்:
புறவாழிக் கடல்
பொங்கி எழுந்த பேரூழிக்காலத்தில் இறைவன் அறுபத்துநான்கு
கலைகளையும் ஆடையாக உடுத்துப் பிரணவத் தோணியில்
அம்மையப்பனாக எழுந்தருளி வரும்போது ஊழியிலும் அழியாத
இத்தலத்தைக்கண்டு இதுவே மூலமென்றெண்ணித் தங்கினர்.
இங்கே ஒரு மலை உண்டு.
இது இறைவன் ரோமச முனிவருக்காகத் திருக்கயிலைச்
சிகரமொன்றைத் தென்திசையில் தோற்றுவித்து, தானும்
அம்மையுமாக இருந்து காட்சி வழங்கும் இடம். இதனை ‘இருபது
பறவைகள் ஏந்திக்கொண்டிருக்கின்றன’. இங்கே குரு,
லிங்க,
|