எழுந்தருளியிருக்கின்றார்.
அவர்க்கு எதிரில் காளியின் சந்நிதி உள்ளது.
சிதம்பரத்தில்
இருப்பதுபோலவே இங்கு நடராஜர் பெருமையுடன்
விளங்குகின்றார். இப்பதியில் வெள்ளானை பூசித்துப் பேறு பெற்றது. இதை,
வெள்ளானை
வேண்டும்வரம் கொடுப்பர்
வெண்காடு மேவிய விகிர்தனாரே |
என்னும் அப்பர் பெருமானின்
இத்தலத் தேவாரப் பகுதியாலும்,
அயிரா
வதம்பணிய மிக்கதனுக்
கருள்சுரக்கும் வெண்காடு |
என்னும், ஞானசம்பந்தர்
தேவாரப் பகுதியாலும் அறியலாம். இத்தலத்திற்குத்
திருஞானசம்பந்தர் பதிகம் மூன்று, அப்பர் பதிகம் இரண்டு, சுந்தரமூர்த்தி
நாயனார் பதிகம் ஒன்று ஆக ஆறு பதிகங்கள் இருக்கின்றன.
சைவ
எல்லப்ப நாவலர் தலபுராணத்தை இயற்றியுள்ளார். அது அச்சில்
வெளிவந்துள்ளது.
90
திருவெண்ணியூர்
இது
காவிரிக்குத் தென்கரையிலுள்ள நூற்றிரண்டாவது தலம்.
தஞ்சாவூர்-திருவாரூர் தொடர் வண்டிப் பாதையில், கோயில் வெண்ணி
என்னும் தொடர் வண்டி நிலையத்திற்கு 2.5. கி. மீ. தூரத்திலிருக்கின்றது.
தஞ்சை - நீடாமங்கலம், தஞ்சை - திருவாரூர் பேருந்துகளில்
கோயில்வெண்ணி என வழங்கும் இவ்வூரை அடையலாம்.
இறைவர்
திருப்பெயர் வெண்ணிக்கரும்பர். இறைவி திருப்பெயர்
அழகியநாயகி.
இறைவர்
திருமேனி கரும்புக்கழிகளை ஒன்றுசேர்த்து வைத்தாற்போல்
இருக்கின்றது.
|