1526.
|
கூறு
பெண்ணுடை கோவண முண்பது
வெண்டலை
மாறி லாருங்கொள் வாரிலை மார்பில்
அணிகலம்
ஏறு மேறித் திரி வ ரிமை யோர்தொழு
தேத்தவே
ஆறு நான்குஞ்சொன் னானுமை யாறுடை
யையனே. 3 |
1527.
|
பண்ணி
னல்லமொழி யார்பவ ளத்துவர்
வாயினார்
எண்ணி னல்லகுணத் தாரிணை வேல்வென்ற கண்ணினார் |
3.
பொ-ரை:
ஐயாறுடைய ஐயன், ஒரு கூறாக உமையம்மையைக்
கொண்டவர்: கோவண ஆடை உடுத்தவர்: வெள்ளிய தலையோட்டில்
பிச்சையேற்று உண்பவர். மார்பில் அணிந்துள்ள அணிகலன்களோ
பண்டமாற்றாகப் பிறகொள்வார் இல்லாத ஆமை யோடு, பன்றிக்கொம்பு,
பாம்பு முதலானவை. இடபத்தில் ஏறித்திரிபவர். தேவர் பலரும் வணங்க
நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவர்.
கு-ரை:
கூறு - இடப்பால், பெண் - உமாதேவியார், உடை
கோவணம், உண்பதும் வெண்டலையில். மார்பிலணிந்தன முற்றலாமை
யிளநாகமொடு ஏனமுளைக் கொம்பு, பரிவர்த்தனஞ் செய்து கொள்ளு
முறையில், ஏனைப் பொற்கலம் மணிக்கலம், போலக்கொள்வார்
எவருமில்லை. மாறில் - பரிவர்த்தனஞ் செய்யவேண்டின். இப்பொருளில்
உலக வழக்குமுண்டு. கூறு - எருது. ஆறும் - சிக்கை, கற்பசூத்திரம்,
வியாகரணம், நிருத்தம், சேந்தோவிசிதி, சோதிடம் என்னும் அங்கம்
ஆறும்; நான்கும் - வேதம் நான்கும், (தி.2 ப.84 பா.11) சொன்னான்-
சிவபிரான். மிக்க வேத மெய்ந்நூல் சொன்னவனே திருவாசகம் 147.
4.
பொ-ரை :
பண்ணிசையினும் இனிய மொழி பேசுபவரும், பவளம்
போன்று சிவந்த வாயினை உடையவரும் எண்ணற்ற நல்ல குணங்களை
உடையவரும், வேல் இணை போன்ற விழியினரும்
|