பக்கம் எண் :

5

தருமை ஆதீனத்துகுச் சொந்தமான

திருச்சிராப்பள்ளி மௌனமடம்

அருட்கொடை

     திருச்சிராப்பள்ளியில் ஸ்ரீ தாயுமானவர் திருகோயிலுக்குச் செல்லும்
படிவழிப் பாங்க்ரில் உள்ளது ஸ்ரீ மௌனமடம். திருக்கயிலையிலிருந்து
நந்திதேவரின் மாணவராய்த் தமிழ்நாடு போந்த திருமூல நாயனாரின்
உபதேச மரபில் வந்த ஸ்ரீ சாரம முனிவரால் இத்திருமடம் தாபிக்கப்
பெற்றது. அம்முனிவருக்குப் பின் 17ஆவது பட்டமாக எழுந்தருளியிருந்த
ஸ்ரீமௌனகுரு சுவாமிகள் தயுமான சுவாமிகளை ஆட்கொண்டவர்.
ஸ்ரீமௌனகுரு சுவாமிகள் தருமை அதீனத்தில் தமது மடாலய
பரிபாலனத்தை ஒப்படைத்துப் பரிபூரணம் எய்தினார்கள். அதுமுதல் ஸ்ரீ
மௌனமடம் தருமை ஆதீனத்தின் நிர்வாகத்தில் அதீனத் திருக்கூட்டத்து
அடியவர் ஒருவர் நியமனத்துடன் ஸ்ரீலஸ்ரீ குருமகாசன்னிதானம் அவர்களின்
பரிபாலனத்தில் இருந்து வருகிறது.

     ஸ்ரீ தாயுமானவர் திருக்கோயிலில் நடைபெறும் நித்திய நைமித்திய
பூஜைகள் பல இத் திருமடத்தின் சார்பில் நிகழ்த்தப் பெறுகின்றன. சமயச்
சொற்பொழிவுகள்,சைவ சித்தாந்த வகுப்புக்கள் ஸ்ரீ மௌனகுரு, ஸ்ரீ
தாயுமானவர் குருபூஜை முதலியன நடத்தப் பெற்று வருகின்றன.

     இத் திருமடத்தின் நற்பொருளால் இத்திருமுறை வெளியிடப்
பெறுகிறது.


குறிப்பு : இத்திருமுறைப் பதிப்பின் விற்பனைத் தொகை மீண்டும்
இத்திருமுறையை வெளியிட்டுவரப் பயன் படுத்தப்பெறும்.