2279.
|
அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங்
குருக்கொச்சை
புறவமஞ்சீர்
மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி
தோணிபுரந்
தேவர்கோனூர்
அம்மான்மன் னுயர்சண்பை தராயயனூர்
வழிமுடக்கு
மாவின்பாச்சல்
தம்மானொன் றியஞான சம்பந்தன்
றமிழ்கற்போர்
தக்கோர்தாமே. 12 |
திருச்சிற்றம்பலம்
தருளிய. எழில் - அழகு.
அதிபன் - இந்திரன். சிறை - அணை. தேசு -
ஒளி. கையர் - கீழோர். பரிசு - சிவமாம்பெற்றி, சிவன் இயல்பு.
12.
பொ-ரை: அம்மானாகிய சிவபிரான் எழுந்தருளிய
கழுமலம்
முதலான பன்னிரு திருப்பெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியின் மீது
வழியில் மாறிமாறி பாய்ந்துள்ள கோமூத்திரியின் அமைப்பில் அங்குள்ள
சிவபிரான் மேல் ஒன்றிய மனமுடைய ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்
மாலையைக் கற்போர் தக்கவராவர்.
கு-ரை:
மா - பெருமை, இலக்குமியுமாம். மானத்து -
பெருமையையுடைய. ஒள் - ஒளி. அம்மால் - அழகிய திருமால்
(கிருட்டிணமூர்த்தி). சிவபிரானுமாம். வழிமுடக்கும் ஆவின் பாச்சல்:-
கோமூத்திரி என்னுஞ் சித்திரபந்தத்தினியல்பு கூறப்பட்டது. தம்மான்
-தம்பிரான். தன்னடைந்தார் தம்பிரான் ஆவான் (தி.2 ப.176 பா.1).
தம்மானை ஒன்றிய என்று இரண்டனுருபு விரித்து. சிவபிரானொடு அத்து
விதமுற்ற என்று பொருள் கொள்க. தமிழ்-சைவமும் தமிழும் என்ற
தொடர்க்கண் உள்ள தமிழ்மறை.
தேவாரம்
ஓதுவோர்
பெருமை
............ஞானசம்பந்தன்
தமிழ்பத்தும்,
யாழின்னிசை வல்லார் சொலக் கேட்டாரவர் எல்லாம்
ஊழின்மலி வினைபோயிட உயர்வான் அடைவாரே.
-தி.1-ப.11-பா.11
|
|