பக்கம் எண் :

1008திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3673. பற்றலர்த முப்புரமெ ரித்தடிப
       ணிந்தவர்கண் மேலைக்
குற்றமதொ ழித்தருளு கொள்கையினன்
     வெள்ளின்முது கானிற்
பற்றவனி சைக்கிளவி பாரிடம
     தேத்தநட மாடுந்
துற்றசடை யத்தனுறை கின்றபதி
     தோணிபுர மாமே.                   6


செய்தவர் சிவபெருமான். மலைகள் மிக்க காட்டில் திரிகின்ற சினமுடைய,
கொல்லும் தன்மையுடைய வலிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவர்.
தம்மையே சிந்தித்திருப்பவர்கட்குத் தாயைப் போலக் கருணை காட்டிப்
பாதுகாப்பவர். எங்கும் நிறைந்த தன்மையர். அடியவர்கட்கு நன்மை
புரிதலையே தம் கடனாகக் கொண்ட அப்பெருமானார் வீற்றிருந்தருளுகின்ற
இடம், தூய்மையுடைய வேதியர்கள் வேதங்களை ஓதி நிறைகின்ற
திருத்தோணிபுரம் ஆகும்.

     கு-ரை: தேயும் - கலை தேய்ந்து வரும். மதியம் - பிறைச்சந்திரன்.
(அம் சாரியை.) இலங்கிட- தன்னைச்சரண்புக்கதால் விளங்க (இலங்கு+இடு+அ
= இலங்கிட) இடு துணை வினை என்ப. விலங்கல் - மலைகள். மலி - மிக்க.
கானில் - வனத்தில். காயும் - கோபிக்கின்ற. அடு - கொல்லவல்ல. திண் -
வலிய. கரியின் - யானையின். ஈர் உரிவை -உரித்ததோலைப் போர்த்தவன்.
ஈர் உரிவை - "அடியளந்தான் தாயது" எனல் போல்வது. நினைப்பார
்-நினைப்பவருக்குத் தாயைப்போல உதவ எங்கும் நிறைந்த ஒரு தன்மையினர்.
நன்மையொடு வாழ்வு - நன்மைபுரிவதே தொழிலாக வாழும் இடம்.
(முறையாக) ஓதி - வேதங்களையோதி, நிறைகின்ற திருத்தோணிபுரம்.

     6. பொ-ரை: சிவபெருமான் பகைவர்களின் முப்புரங்களை எரிந்து
சாம்பலாகுமாறு செய்தவர். தம் திருவடிகளைப் பணிந்து வணங்குபவர்களின்
குற்றங்களை ஒழித்துத் திருவருள் புரியும் கொள்கையினையுடையவர்.
பாடைகள் மலிந்த சுடுகாட்டில் பற்றுடையவர். பூதகணங்கள் இசைப்
பாடல்களைத் துதித்துப்பாட நடனமாடுபவர். அடர்ந்து வளர்ந்த
சடையையுடைய, அனைத்துயிர்க்கும் தந்தையாகிய சிவபெருமான் வீற்றிருந்து
அருளுகின்ற தலம் திருத்தோணிபுரம் ஆகும்.

     கு-ரை: பற்றலர் - பகைவர் (மனம் பற்றுதல் இல்லாதவர்