பக்கம் எண் :

1032திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3700. திரைகளிரு கரையும்வரு பொன்னிநில
       வுந்திருந லூர்மேல்
பரசுதரு பாணியைந லந்திகழ்செய்
     தோணிபுர நாதன்
உரைசெய்தமிழ் ஞானசம்பந்தனிசை
     மாலைமொழி வார்போய்
விரைசெய்மலர் தூவவிதி பேணுகதி
     பேறுபெறு வாரே.                    11

 திருச்சிற்றம்பலம்


கொள்ளும் புத்தத்துறவிகளும் கொண்ட வேடத்தை ஒரு பொருட்டாக ஏற்க
வேண்டா. சிவபெருமான் உமாதேவியை உடனாகக் கொண்டு இடபத்தின்
மீது இனிதேறி, தொன்றுதொட்டு வீற்றிருந்தருளும் இடமாவது, சிவபெருமானே
முழுமுதற் கடவுள் என்ற தெளிந்த உள்ளமும், அன்பும் உடையவர்களான
சிவனடியார்கள் வாழ்கின்ற திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: கீறும் - கிழிக்கப்படுகின்ற, உடை (அறுவை, துணி என்னும்
காரணப் பெயர் குறிப்பதையும் அறிக) உடையும், கோவணமும்
இல்லாமையினால், ஒல் - ஆடையொலித்தல். ஓவிய - நீங்கிய, தவத்தாராகிய
சமணத் துறவிகளும். பாறும் உடல் - அழியக்கூடிய உடலை, மூடு
துவராடையர்கள் - உடற்பற்று நீங்காதவராய்த் துவராடையால்
போர்த்துக்கொள்ளும் புத்தத் துறவிகளும், கொண்ட வேடத்தைக் கருதற்க.
மடவாளொடு இனிது எருது ஏறித் தொன்றுதொட்டிருந்த இடம், தேறும்-
சிவனே முழுமுதற்கடவுள் எனத்தெளிந்த, வாரம் - அன்பு.

     11. பொ-ரை: காவிரியின் இருகரைகளிலும் அலைகள் மோதுவதால்
செழிப்புடன் விளங்கும் திருநல்லூர் என்னும் திருத்தலத்திலுள்ள
மழுவேந்திய கரமுடைய சிவபெருமானை, வயல் வளமிக்க, தோணிபுர
நாதனான தமிழ் ஞானசம்பந்தன் போற்றிசைத்த இப்பாமாலையை
ஓதுபவர்கள், பிரமனால் நறுமணமிக்க சிறந்த மலர்கள்தூவி வழிபடப்படும்
சிவபெருமானுடைய திருவடியைப் பெறும் பேற்றினை அடைவார்கள்.

     கு-ரை: திரைகள் - அலைகள், இருகரையும் வரு, பொன்னி - காவிரி,
நிலவும் - செழிப்பிக்கும், திருநல்லூர், என்றது, மேல்(முதற்