3705. |
காமனை யழல்கொள விழிசெய்து கருதலா
|
|
கடிமதில்
தூமம துறவிறல் சுடர்கொளு வியவிறை
தொகுபதி
ஓமமொ டுயர்மறை பிறவிய வகைதனொ
டொளிகெழு
பூமக னலரொடு புனல்கொடு வழிபடு
புறவமே. 5
|
படி செய்தவரும், பூதகணங்கள்
உலவும் காட்டில் உமாதேவி அஞ்சும் படி
வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவருமான சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்ற இடம் திருப்புறவம் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
மறையவன் - மார்க்கண்டேயர். மேதகு - சிறந்த, (திருவடி)
இறையுற - சற்றே பொருந்திய மாத்திரத்தில் (உயிர் விலகுவித்தார்)
விலகினார் - பிறவினை விகுதி குன்றியது. கான் இடை - காட்டில். (உமை)
வெருவுஉற - அஞ்ச. சாதகஉரு - பூதாகிருதியோடு, உரு இயல் - மூன்றாம்
வேற்றுமைத் தொகை. போதகம் -யானை. அதள் - தோல். மருவினர் -
போர்த்தவர்.
5.
பொ-ரை: சிவபெருமான் மன்மதன் எரியுமாறு நெற்றிக் கண்ணால்
விழித்து நோக்கியவர். பகையசுரர்களது காவலுடைய மும்மதில்களும்
புகையெழும்படி வலிய நெருப்புப் பற்றும்படி செய்தவர். அவர்
வீற்றிருந்தருளும் தலமாவது, வேள்வி வளர்த்து, வேத மந்திரங்கள் ஓதி, பிற
வாத்தியங்கள் ஒலிக்க, தீபமேற்றிப் பிரமன், மலரும், நீரும் கொண்டு
வழிபட்ட திருப்புறவம் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
காமனை, விழிசெய்து - பார்த்து. கடி - காவல். தூமம் உற
- புகையெழுமாறு. விறல்சுடர் கொளுவிய- வலிய நெருப்புப் பற்றச்செய்த.
இறை - இறைவன். தொகுபதி - தங்கியிருக்கும் தலம். பூமகன் - பிரமன்.
(அவன் வழிபாடு பின்னிரண்டடிகளிலும் கூறப்படுகிறது. ஓமம், மந்திரம்
இய(ம்) வகை - வாத்திய வர்க்கங்கள். ஒளி - தீபம், அலர், புனல், பிற -
ஏனையவும். கொடு - கொண்டு.
|