3707. |
வரிதரு
புலியத ளுடையினர் மழுவெறி |
|
படையினர்
பிரிதரு நகுதலை வடமுடி மிசையணி
பெருமையர்
எரிதரு முருவின ரிமையவர் தொழுவதொ
ரியல்பினர்
புரிதரு குழலுமை யொடுமினி துறைபதி
புறவமே. 7
|
சூழ்ந்திருப்பதால்
மருதவருணனையும், இவ்விரு வருணனைகளும் பயில ஆங்காங்கு வருவது அறிந்து மகிழத்தக்கது. இரண்டாம்
அடியில் முரண்தொடை, நடு - சிவம்.
7.
பொ-ரை: சிவபெருமான் வரிகளையுடைய புலியின்தோலை ஆடையாக உடுத்தவர்.
பகைவர்மேல் வீசும் மழுப்படையையுடையவர். யாகத்திலிருந்து பிரிந்து வந்த நகுதலையைத்
திருமுடியின் மீது மாலைபோல் அணிந்து கொண்ட பெருமையையுடையவர். எரிபோல் மிளிர்கின்ற
சிவந்த மேனியுடையவர். தேவர்களால் தொழப்படும் தன்மையுடையவர். இத்தகைய சிவபெருமான்
பின்னிய கூந்தலையுடைய உமாதேவியோடு இனிதே வீற்றிருந்தருளும் பதி திருப்புறவம் என்னும்
திருத்தலமாகும்.
கு-ரை:
வரிதரு - வரிகளையுடையபுலி. அதள் - தோல். உடையினர். எறி -பகைவர்மேல் (வீசும்
மழுப்படையினர்,) பிரிதரு - யாகத்திலிருந்தும் பிரிந்து வந்த, நகுதலை - நகுவெண்டலையை.
வடம் - மாலையாக. முடிமிசை - தலையில் அணிபெருமையர். இதிற் பெருமையாவது:- கொல்ல
வந்த அதன் வலி கெடுத்து அணியெனக் கொண்டமை. ஆன்மாக்களை வினைவழி அழுத்தும் ஆணவ
மலத்தின் வலி கெடுத்து, பேரின்பத்திலழுந்துமாறு செய்யவல்லான் தானே என்பதுணர்த்தி
நின்றமை. இக்கருத்தை, முத்திதனில் மூன்று முதலும் மொழியக்கேள், சுத்த அநுபோகத்தைத்
துய்த்தலணு...... "இன்பங் கொடுத்தலிறை இத்தை விளைவித்தல் மலம். அன்புடனே கண்டு
கொளப்பா" (உண்மை விளக்கம். 51) எரிதரும் உருவினர், தரும்:- உவமவாசகம்; போன்ற
என்னும் பொருளில் வருவதால், புரிதரு - சடைபின்னிய. குழல்(உமை) - ஐம்பால் ஆகிய
குழலில், புரிதருகுழல் என்றது, உமையொடு்ம் இனிது உறைபதி புறவம்.
|