|
வானகம்
வரையக மறிகடல் நிலனெனு
மெழுவகைப்
போனக மருவின னறிவரி யவர்பதி
புறவமே. 9 |
3710. |
கோசர
நுகர்பவர் கொழுகிய துவரன |
|
துகிலினர்
பாசுர வினைதரு பளகர்கள் பழிதரு
மொழியினர்
நீசரை விடுமினி நினைவுறு நிமலர்த
முறைபதி
பூசுரர் மறைபயி னிறைபுக ழொலிமலி
புறவமே. 10 |
ஆணையினால் மன்னுயிர்கட்குத்
தனு, கரண, புவன, போகங்களைப்
படைக்கும் பிரமனும், ஏழுவகையாக அமைந்த வானகம், மலை, கடல்,
நிலன் இவற்றை உணவாக உண்டவனான திருமாலும் அறிதற்கரியவரான
சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருப்புறவம் என்னும்
திருத்தலமாகும்.
கு-ரை:
அகம் - உள்ளிடத்தில், தேன் மருவிய - தேன் பொருந்திய,
செறிதரு - இதழ்நெருங்கிய, தவிசு செய்முளரியினில் எனமாறிக்கூட்டி
ஆசனமாகக்கொண்ட தாமரைப்பூவிலிருந்து சிவபெருமான் திருவருளாணை
மேற்கொண்டு உயிர்வர்க்கங்கட்குத் தநுகரண புவனபோகங்களைப்
படைப்பிக்கின்ற பிரமன் என்பது இரண்டாம் அடியின் கருத்து:- ஊன் -
உடம்பு; தநு. அகம் - மனம் முதலிய கரணம் (உபலட்சணம்). மருவிய
(நுகர்பொருள்கள்) பொருந்திய, புலன் - புலம், இடம், புவனம். நுகர்வு -
போகமுமாகிய இவற்றைப் படைக்கும். உணர்வு உடை - அறிவையுடைய,
ஒருவனும் (பிரமனும்,) ஆகாயம் பூமியாகிய ஏழு உலகங்களையும் உணவாக
உடைய திருமாலும். வரை அகம் - மலைநிலம். பூமி - மறிகடல் நிலன்
எனப்பட்டது.
10.
பொ-ரை: நீரில் சஞ்சரிக்கின்ற மீன்களை உணவாகக்
கொள்பவர்களும், துவர் தோய்க்கப்பட்ட ஆடையணிபவர்களாகிய
புத்தர்களும் ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயனறியாது வெறும்
|