பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)86. திருச்சேறை1057

  பொடிபடு முருவினர் புலியுரி பொலிதரு
     மரையினர்
செடிபடு சடைமுடி யடிகடம் வளநகர்
     சேறையே.                         4

3727. அந்தர முழிதரு திரிபுர மொருநொடி
       யளவினில்
மந்தர வரிசிலை யதனிடை யரவரி
     வாளியால்
வெந்தழி தரவெய்த விடலையர் விடமணி
     மிடறினர்
செந்தழ னிறமுடை யடிகடம் வளநகர்
     சேறையே.                          5


அணிந்த உருவினர். இடையில் புலித்தோலாடை அணிந்தவர். செடிபோன்று
அடர்த்தியான சடைமுடி உடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும்
வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: துடிபடும் இடை உடை - உடுக்கைபோலும் இடையையுடைய
(படும் - உவமவாசகம்) மடவரல் உமை - பெண்ணாகிய உமாதேவியார்.
இடிபடு - இடிபோலும். (குரல் உடை விடையினர்.) பொடி - திருநீறு.
பொலிதரு - விளங்குகின்ற. செடிபடு - செடிகளைப் போல் அடர்த்தியான,
சடைமுடி அடிகள்..

     5. பொ-ரை: சிவபெருமான் ஆகாயத்தில் சுற்றித் திரிந்த திரி
புரங்களை ஒரு நொடிப்பொழுதில் மலையை வில்லாகவும், அதனிடை வாசுகி
என்னும் பாம்பை நாணாகவும் பூட்டி, திருமால், வாயு, அக்கினி இவற்றை
அம்பாகக் கொண்டு எய்து வெந் தழியுமாறு செய்த வீரமிக்க வாலிபர்.
தேக்கிய விடம் மணி போன்று விளங்கும் கண்டத்தர். செந்தழல் போன்ற
மேனியுடைய அவர் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: அந்தரம் - ஆகாயத்தில். உழிதரு - சுற்றித்திரிந்த. (திரிபுரம்)
மந்தரம் - மலை (சிறப்புப்பெயர், பொதுப் பெயரைக் குறித்தது) வரிசிலை -
கட்டமைந்த வில். அதன் இடை - அதில் (இடை ஏழனுருபு) பூட்டும்நாண்.
அரவு - பாம்பு ஆக. அரி வாளியால் -