பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)87. திருநள்ளாறு1069

3737. மைச்சணி வரியரி நயனிதொன்
       மலைமகள் பயனுறு
கச்சணி கதிரிள வனமுலை
     யவையொடு கலவலின்
நச்சணி மிடறுடை யடிகணள்
     ளாறர்தந் நாமமே
மெச்சணி யெரியினி லிடிலிவை
     பழுதிலை மெய்ம்மையே.              4

3738. பண்ணியன் மலைமகள் கதிர்விடு
       பருமணி யணிநிறக்
கண்ணியல் கலசம தனமுலை


       4. பொ-ரை: மை பூசப்பெற்ற ஒழுங்கான செவ்வரி படர்ந்த அழகிய
கண்களையுடைய தொன்மையாய் விளங்கும் உமா தேவியாரின் பரஞானம்,
அபரஞானம் ஆகிய பயன்தரும் கச்சணிந்த ஒளிரும் இளைய அழகிய
முலையைத் தழுவும் நஞ்சணி கண்டத்தினனான திருநள்ளாற்று இறைவனைப்
போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை அழகிய நெருப்பிலிட்டால்
அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே.

     கு-ரை: மைச்சு - மை அணியப்பெற்றதாய். மைத்து, என்பது மைச்சு
என்றாயது எழுத்துப் போலி. அணி - அழகிய. வரி - ரேகையின். அரி -
ஒழுங்கு பொருந்திய. நயனி - கண்களை யுடையவராகிய. தொல்மகள் -
பழமையான உமாதேவியார். பயன் உறு - அபரஞான, பரஞானங்களாகப்
பயன் தருதலை உடைய கச்சு அணி. வனம் - அழகிய. (முலையோடு
கலவலின்). நஞ்சு அணி - விடத்தை அணிந்த. மிடறு உடை -
கண்டத்தையுடைய. அடிகளாகிய நள்ளாறர்தம் புகழ்களாகிய இவைகள்
எரியினில் இடில் பழுதிலை.

     5. பொ-ரை: பண்பாடமைந்த மலைமகளின் ஒளிவீசுகின்ற
இரத்தினங்கள் பதித்த ஆபரணத்தை அணிந்த, அழகான கலசம் போன்ற
இருமுலைகளையும் கூடும், குளிர்ச்சி பொருந்திய நீர் பாயும் திருநள்ளாற்று
இறைவனின் நாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை
ஆகாயமளாவிய இந்நெருப்பில் இட்டாலும் அவை பழுதில்லாதனவாகும்
என்பது சத்தியமே.