பக்கம் எண் :

1078திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3748. மாடம தெனவளர் மதிலவை யெரிசெய்வர்
       விரவுசீர்ப்
பீடென வருமறை யுரைசெய்வர் பெரியபல்
     சரிதைகள்
பாடல ராடிய சுடலையி லிடமுற
     நடநவில்
வேடம துடையவர் வியனக ரதுசொலில்
     விளமரே.                          4


இழைத்த ஆபரணங்களை அணிந்த மார்பும் உடையவர். சங்கு - சங்கும்.
அதிர் - ஒலிக்கும். பறை, குழல், முழவினோடு - இவ்வாத்தியங்களோடு,
இசைவதோர் சரிதையர் - இசைவதாகிய திருக்கூத்தையுடையவர். (சரிதை -
இங்கு நடனத்தைக் குறித்து நின்றது.) வெம் - கொடிய. கதிர் - ஒளியை
உடைய. மழு உடையவர் இடமெனில் - அது விளமர்.

     4. பொ-ரை: மாடம் போன்று உயர்ந்து விளங்கிய, தேவர்கட்குத்
தீமை செய்த பகையசுரர்களின் மும்மதில்களைச் சிவபெருமான் எரித்தவர்.
தமது புகழ் பாடுவதையே பொருளாகக் கொண்ட வேதங்களை அருளிச்
செய்தவர். தமது வரலாறுகள் அடியவர்களால் பாடலாகப் பாடப்படும்
பெருமையுடையவர். சுடுகாட்டை அரங்கமாகக் கொண்ட திருநடனம்
செய்யும் கோலத்தர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பெருமை
மிக்க நகரானது திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: மாடம் (அது) என - அது மாடம் என்னும்படி. வளர் -
உயர்ந்த. மதில் அவை - திரிபுரங்களை எரிசெய்வர். மாடம் அத என
ஒருமையும். மதில் அவை எனப் பன்மையும் வந்தமை, ஒவ்வொன்றையும்
தனித்தனிக் குறிக்கும்போதும், ஒருங்கு குறிக்கும்போதும் முறையே கொள்க.
விரவு சீர்ப் பீடு என - பொருந்திய தமது புகழின் பெருமையே பொருளாக
(அருமறை) உரைசெய்வர் - சொல்லியருள்வர் என்பது, வேதங்களிற்
கூறப்படுவன சிவபிரானது புகழ்களே என்ற கருத்து. “எவன் நினைத்த
மாத்திரையில் சர்வாண்டங்களையும் ஆக்கி அழிக்கவல்லனோ, எவனுடைய
ஆணையால் இரு சுடரியங்குவதும், வளியுளர்வதும் வான்பெய்வதும்
ஆதியன நிகழ்கின்றவோ. அவனே கடவுள். அவனே தலைவன். அவனே
சரண்புகத் தக்கவன்’