பக்கம் எண் :

1122திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

இரவினர் பகலெரி கானிடை
     யாடிய வேடர்பூணும்
அரவின ரரிவையோ டிருப்பிட
     மம்பர்மா காளந்தானே.                3

3803. நீற்றினர் நீண்டவார் சடையினர்
       படையினர் நிமலர்வெள்ளை
ஏற்றின ரெரிபுரி கரத்தினர்
     புரத்துளா ருயிரைவவ்வும்
கூற்றினர் கொடியிடை முனிவுற
     நனிவருங் குலவுகங்கை
ஆற்றின ரரிவையோ டிருப்பிட
     மம்பர்மா காளந்தானே.               4


திரிபவர். நண்பகல் போல் சுடுகின்ற முதுகாட்டில் இரவில் நெருப்பேந்தி
ஆடும் வேடத்தை உடையவர். பாம்பை அணிந்துள்ளவர். அப்பெருமான்
உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும்
திருத் தலமாகும்.

     கு-ரை: தம்மைத் துதிக்கும் அடியவர் படும் துயரத்தை அழிப்பவர்.
அன்பில்லாரிடத்தே ஒளித்துக்கொள்பவர், கனல் அன்ன உருவினர். படுதலை
- இறந்தாரது தலையில். பலி கொடு - பிச்சையேற்றலை மேற்கொண்டு, ஏகும்
- ஊர்தோறும் செல்கின்ற. இரவினர் - இரத்தலையுடையவர். பகல் எரி -
நண்பகலைப்போலச் சுடுகின்ற. முதுகாட்டில், திருக்கூத்தாடிய திருக்
கோலத்தையுடையவர். அரவத்தைப் பூண்டவர், அவர் அரிவையோடு
இருக்கும் இடம். அம்பர் மாகாளம். இரவினர் - பகலெரிகான் -
சொன் முரண்.

     4. பொ-ரை: சிவபெருமான் திருவெண்ணீறணிந்த மேனியர். நீண்டு
தொங்கும் சடையினர். கரங்களில் பலவகை ஆயுதங்கனை ஏந்தியுள்ளவர்.
இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். வெண்ணிற இடபத்தை வாகனமாக
உடையவர். நெருப்பேந்திய கரத்தினர். திரிபுர அசுரர்களின் உயிரைக்
கவரும் எமனாக விளங்கியவர். கொடிபோன்ற இடையுடைய உமாதேவி
கோபம் கொள்ளும்படி கங்கையாகிய நங்கையை மகிழ்வுடன் சடையில்
தாங்கியவர். அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம்
திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும்.