பக்கம் எண் :

1124திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

கழகனார் கரியுரித் தாடுகங்
     காளர்நங் காளியேத்தும்
அழகனா ரரிவையோ டிருப்பிட
     மம்பர்மா காளந்தானே.                6

3805. சங்கவார் குழையினர் தழலன
       வுருவினர் தமதருளே
எங்குமா யிருந்தவ ரருந்தவ
     முனிவருக் களித்துகந்தார்
பொங்குமா புனல்பரந் தரிசிலின்
     வடகரை திருத்தம்பேணி
அங்கமா றோதுவா ரிருப்பிட
     மம்பர்மா காளந்தானே.                7


அழகர். யானைத் தோலை உரித்துப் போர்த்தி ஆடுபவர். எலும்பு மாலை
அணிந்துள்ளவர். காளியால் வணங்கப்பட்ட அழகர். அப்பெருமான்
உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: பழக - ஒரு நாளும் இடைவிடாமல்; எந்நாளும் (மலர்
பறித்து இறைஞ்சுவார்) “முட்டாதே தொட்டால் முடிக்க சிவபூசை; விட்டான்
நரகில் விழும்” என்ற கருத்து. இனிப் பழக என்பதற்கு உண்மைச் சரியை
உபாயச்சரியை என வருவனவற்றுள் உபாயங் கூறியதாகக் கூறலும் ஒன்று.
அதை “சரியையோரிரண்டும் தவிராதவர், கிரியையோரிரண்டுங் கெழு
முற்றவர் ... மரிய தூய மடங்கள் அநந்தமே” (பேரூர்ப் புராணம்.
திருநகரப்படலம் - 83.) செறிந்த - நீங்காத. தமது குணங்களைப் புகழ்ந்து
துதிப்பவர் பலர் கூடும் கழகத்தில் இருப்பவர் என்பது இரண்டாமடியின் கருத்து. கரி உரித்து ஆடு - யானையை யுரித்து அம்மகிழ்ச்சியால் ஆடிய.
(கங்காளர்) கங்காளம் - முழு எலும்புக் கூடு. திருவிக்கிராமாவதாரத்
திருமாலின் செருக்கடக்கிய அறிகுறி. அம்பன், அம்பாசூரன் என்ற அரக்
கரைக் கொன்ற பழிதீரக் காளி பூசித்தமை குறித்து, காளியேத்தும் அழகனார்
என்றார்.

     7. பொ-ரை: இறைவர் சங்கினாலாகிய குழையைக்
காதிலணிந்துள்ளவர். நெருப்புப் போன்ற செந்நிற மேனியர். தமது அருளால்
எங்கும் வியாபித்துள்ளவர். அரிய தவம் செய்யும் முனிவர்களுக்குத்
தம்மையே அளித்து மகிழ்பவர். அவர் அங்கு, பொங்கும் நீர் பரந்த