பக்கம் எண் :

1132திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3815. வெந்தவெண் பொடியணி வெங்குரு மேவிய
       அந்தமில் பெருமையி னீரே
அந்தமில் பெருமையி னீருமை யலர்கொடு
     சிந்தைசெய் வோர்வினை சிதைவே.        6

3816. விழமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
       அழன்மல்கு மங்கையி னீரே
அழன்மல்கு மங்கையி னீருமை யலர்கொடு
     தொழவல்லல் கெடுவது துணிவே.         7


தக்கவர் - வழிபடும் அடியவர், (உமது) அடியினை உறுவது தவமே -
திருவடிகளைப் போற்றுவதே சிறந்த தவத்தின் பயனாம், தவம் என்பது
அதன்பயனைக் குறித்தது. தவத்தின் பயன் அது என்பதனை “எந்த மாதவம்
செய்தனை நெஞ்சமே, பந்தம் வீடு அவை ஆயபராபரன், அந்தமில் புகழ்
ஆரூர் அரனெறி, சிந்தையுள்ளும் சிரத்துளும் தங்கவே.” என்னும்
திருக்குறுந்தொகை யானும் உணர்க

     6. பொ-ரை: சுடப்பட்ட வெண்ணிறத் திருவெண்ணீற்றினை அணிந்து,
திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற
அழிவில்லாத புகழுடைய சிவபெருமானே! அழிதல் இல்லாத புகழுடைய
உம்மை மலர்கள் கொண்டு வழிபட்டுத் தியானிப்பவர்களின் வினைகள்
சிதைந்து போகும்.

     கு-ரை: வெந்த - சுடப்பட்ட, வெண்பொடி - வெண்மையான திருநீறு,
அந்தம் - முடிவு, அழிவு. நீறு அணி அந்தம் இல் பெருமையினீர் - திரு
நீற்றையணிந்து, அதனால்தாம் அழிவில்லாதவன் எனக்காட்டும்
பெருமையையுடையீர், “சிவனவன் திரடோண்மேல், நீறு நின்றது கண்டனை”
என்னும் திருவாசகமும் இக்கருத்தாதல் காண்க.

     7. பொ-ரை: திருவிழாக்கள் நிறைந்ததும், சோலைகள் அழகு
செய்வதுமான திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளும் நெருப்பேந்திய அழகிய திருக்கரத்தையுடைய சிவ
பெருமானே! நெருப்பேந்திய அழகிய திருக்கரமுடைய உம்மை மலர்கள்
கொண்டு வழிபடுபவர்களின் துன்பங்கள் கெடுவது நிச்சயம்.