3827. |
ஏத்தரும்
புகழணி யின்னம்பர் மேவிய |
|
தூர்த்தனைத்
தொலைவுசெய் தீரே
தூர்த்தனைத் தொலைவுசெய் தீருமைத் தொழுபவர்
கூர்த்தநற் குணமுடை யோரே. 8 |
3828. |
இயலுளோர்
தொழுதெழு மின்னம்பர் மேவிய |
|
அயனுமா
லறிவரி யீரே
அயனுமா லறிவரி யீரும தடிதொழும்
இயலுளார் மறுபிறப் பிலரே. 9 |
3829. |
ஏரமர்
பொழிலணி யின்னம்பர் மேவிய |
|
தேரமண்
சிதைவுசெய் தீரே
தேரமண் சிதைவுசெய் தீருமைச் சேர்பவர்
ஆர்துய ரருவினை யிலரே. 10 |
எனும் பதினொன்றாந்
திருமுறையாலறிக.
8.
பொ-ரை: போற்றுதற்கு அரிய புகழுடைய அழகிய திருஇன்னம்பர்
என்னும் திருத்தலத்தில் விருமபி வீற்றிருந்தருளுபவரும், தூர்த்தனான
இராவணனை அடர்த்தவருமான சிவபெருமானே! தூர்த்தனான இராவணனை
அடர்த்த உம்மைத் தொழுபவர் பேரறிவும், நற்குணம் உடையவராவர்.
கு-ரை:
ஏத்த அரும் - துதித்தற்கரிய, புகழ். துர்த்தன் - பரதார
விருப்பினனாகிய இராவணன், தொலைவு செய்தீர் - வலிமையழியச் செய்தீர்,
கூர்த்த - மிகுந்த, நற்குணம் - சத்துவகுணம்.
9.
பொ-ரை: நல்லியல்புடையோர் தொழுது எழுகின்ற திருஇன்னம்பர்
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானே! பிரமனும்,
திருமாலும் அறிவதற்கரிய உம் திருவடிகளைத் தொழும் இயல்பு
உடையவர்கட்கு மறுபிறப்பு இல்லை.
கு-ரை:
இயல்உளர் - சமய விசேடாதி தீக்கை பெற்ற தகுதியுடைய
அடியார், மறுபிறப்பு இலர் ஆவர்.
10.
பொ-ரை: ஏர் எனப்படும் திருத்தலத்திற்கு அருகிலுள்ள
|