|
மங்கையை
யிடமுடை யீருமை வாழ்த்துவார்
சங்கைய திலர்நலர் தவமே. 6 |
3848. |
செறிபொழி
றழுவிய சிறுகுடி மேவிய |
|
வெறிகமழ்
சடைமுடி யீரே
வெறிகமழ் சடைமுடி யீருை விரும்பிமெய்ந்
நெறியுணர் வோருயர்ந்தோரே. 7 |
3849. |
திரைசயவர்
தொழுதெழு சிறுகுடி மேவிய |
|
தசமுகு
னுரநெரித் தீரே
தசமுக னுரநெரித் தீருமைச் சார்பவர்
வசையறு மதுவழி பாடே. 8 |
யைத் தம் இடப்பாகமாகக்
கொண்டு விளம்கும் சிவபெருமானே! உமா
தேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டு விளங்கும் உம்மை வாழ்த்தும்
அடியவர்கள் அச்சம் இல்லாதவராவர். நலமிக்கவரும், தவப்பேறு உடைய
வரும் ஆவர்.
கு-ரை:
செங்கயல் - ஒருவகைமீன். கயலையுடைய புனல் சூழ்ந்த
சிறுகுடி. நலர்தவம் - நல்தவர் என விகுதி பிரித்துக் கூறுக. நல்ல
தவத்தையுடையவர் ஆவர்.
7.
பொ-ரை: அடர்ந்த சோலைகள் விளங்கும் திருச்சிறுகுடி என்னும்
திருத்தலத்தல் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நறுமணம் கமழும்
சடைமுடியுடைய சிவபெருமானே! நறுமணம் கமழும் சடைமுடியுடைய
உம்மை விரும்பி, அடைவதற்குரிய நெறிகளில் சன்மார்க்க நெறியில்
நிற்போர் உயர்ந்தோராவர்.
கு-ரை:
செறி - அடர்ந்த பொழில். வெறி - வாசனை. மெய்ந்நெறி -
உண்மையான மார்க்கம். சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
தாசமார்க்கம் என்று சங்கரனையடையும் நன்மார்க்கம் நான்கு எனச்
சித்தியாரிற் குறித்தவை. உயர்ந்தோர் அவற்றில் உயர்ந்த சன்மார்க்க
நெறியில் நிற்போர் ஆவர்.
8.
பொ-ரை: எல்லாத் திக்குக்களிலுமுள்ளவர்கள் தொழுது போற்றும்
திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவரும்,
இராவணனின் வலிமை அடங்கும்படி கயிலைமலையின்
|