3866. |
முழவமம்
பொழிலணி முதுகுன்ற மேவிய |
|
மழவிடை
யதுவுடை யீரே
மழவிடை யதுவுடை யீருமை வாழ்த்துவார்
பழியொடு பகையிலர் தாமே. 3 |
3867. |
முருகமர்
பொழிலணி முதுகுன்ற மேவிய |
|
உருவமர்
சடைமுடி யீரே
உருவமர் சடைமுடி யீருமை யோதுவார்
திருவொடு தேசினர் தாமே. 4 |
பாம்பைக் காச்சாகக்
கட்டியுள்ள உம்மை பாடுவார் எவ்விதக் குறையும்
இல்லாதவர். நாள்தோறும் நன்மைகளையே மிகப்பெறுவர்.
கு-ரை:
மொய்குழலாள் - அடர்ந்த கூந்தலையுடைய அம்பிகையோடு
முதுகுன்றில் மேவிய அசைத்தருளினீர் என்க. அசைத்தல் - கட்டுதல். பை -
பாம்பு. உம்மைப்பாடுவார் நாடோறும் நன்மைகள் குறைவின்றி மிகப்பெறுவர்.
நைவு - குறைதல்.
3.
பொ-ரை: முழவுகள் ஒலிக்கின்றதும், சோலைகளால் அழகு
பெற்றதுமான திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற, இளமைவாய்ந்த இடபத்தை, வாகனமாகவும்
கொடியாகவும் உடைய சிவபெருமானே! இளமைவாய்ந்த இடபத்தை
வாகனமாகவும், கொடியாகவும் கொண்ட உம்மை வாழ்த்துபவர்கள் பழியும்,
பாவமும் இல்லாதவர்கள் ஆவர்.
கு-ரை:
முழவு அமர்முதுகுன்றம். பொழில் அணி முதுகுன்றம் என
இயைக்க. மழவிடை - இளங்காளை. பகை - இங்குப் பாவம் என்னும்
பொருளிள் வந்தது. பழிக்கு இனம் ஆகலின். எண்ணுங்காலும் அதுவதன்
மரபே (தொல. சொல்.கிளவியாக்கம்.47.)
4.
பொ-ரை: வாசனை பொருந்திய சோலைகள் அழகு செய்கின்ற
திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
அழகு பொருந்திய சடைமுடியினையுடையவரே! அழகு பொருந்திய
சடைமுடியினை உடையவராகிய உம்மைப் போற்றி வணங்குபவர்கள்
செல்வமும், புகழும் உடையவர்.
|