பக்கம் எண் :

1174திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3884. கணைபிணை வெஞ்சிலை கையிலேந்திக்
       காமனைக் காய்ந்தவர்தாம்
இணைபிணை நோக்கிநல் லாளோடாடு
     மியல்பின ராகிநல்ல
இணைமலர் மேலன்னம் வைகுகான
     லிராமேச் சுரமேயார்
அணைபிணை புல்கு கரந்தைசூடும்
     அடிகள் செயுஞ்செயலே.               6


வீற்றிருந்தருளுகின்ற நீலகண்டமுடைய, இயல்பாகவே பாவங்களின்
நீங்கியவரான எங்கள் சிவபெருமான், சூலம், ஒளி பொருந்திய மழு
ஆகியவற்றை ஏந்திச் சுடுகாட்டை இடமாகக் கொண்டு அழகிய உமாதேவி
அருகில் நின்று பாட, நடனம் செய்யும் குணத்தைக் குறித்துணர்பவர்
சிவஞானிகளாவர்.

     கு-ரை:நின்று - கையில் தங்கி, நல்மாது - உமாதேவியார், பாட
ஆடும், குணம் - தன்மை, ஏல(ம்)நறும் பொழில் - ஏலம் முதலிய
செடிகளையுடைய நறும் மணம் கமழும் பொழில்.

     6.பொ-ரை:சிறந்த தாமரை மலர்களில் அன்னங்கள் வாழும்
சோலைகள் சூழ்ந்த திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிந்தருளுகின்ற, சேர்த்துக் கட்டப்பெற்ற கரந்தைமாலை சூடிய
சிவபெருமான், ஐம்மலர்க்கணைகளைத் தொடுக்க வில்லைக் கையில் ஏந்திய
மன்மதனை எரித்தவர். அப்பெருமான் போன்ற மருண்ட கண்களையுடைய
உமாதேவியோடு நடனமாடும் இயல்புடையவர்.

     கு-ரை:கணைபிணை - (மலர்) அம்புகளைக் கோத்த கொடிய (கரும்பு)
வில்லை யேந்தியவனாகிய காமனை. இணை - இரண்டாகிய (நோக்கு).
பிணை - பெண்மானின் கண் போன்ற. நோக்கி - கண்களையுடைய
அம்மையார், இணை (இதழ்கள்) அடுக்கிய. மலர் - தாமரை மலர். அணை
- ஒன்றோடொன்று சேர்த்து. பிணை - கட்டப்பட்ட. புல்கு - பொருத்திய.
கரந்தை - கரந்தை மாலை. அடிகள் செயும் செயல் எவரானும் அறிய
வருவதொன்று அன்று என்பது குறிப்பெச்சம்.