பக்கம் எண் :

1176திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

என்றுநல் லோர்கள் பரவியேத்து
     மிராமேச் சுரமேயார்
குன்றினா லன்றரக் கன்றடந்தோ
     ளடர்த்தார்கொளுங் கொள்கையே.        8

3887. கோவல னான்முக னோக்கொணாத
       குழக னழகாய
மேவல னொள்ளெரி யேந்தியாடு
     மிமையோ ரிறைமெய்ம்மை
ஏவல னார்புகழ்ந் தேத்திவாழ்த்து
     மிராமேச் சுரமேய
சேவல வெல்கொடி யேந்துகொள்கையெம்
     மிறைவர் செயுஞ்செயலே.               9


மின்னல் போன்று ஒளிரும் செவ்வண்ணத்தராய், பாடி ஆடி வரும் செயலின்
பருமையை உணர்பவர் சிவஞானிகளாவர்.

     கு-ரை:பொன் திகழ் - வெண் பொன்னாகிய வெள்ளியைப் போல்
விளங்குகின்ற நீறுபூசி. மின்திகழ் சோதியர் - மின்னலைப் போல விளங்கும்
ஒளியையுடையவராய். சோதியர் - முற்றெச்சம். மிக்காராய் வரும் மாட்சி
(அனைத்தும்) அரக்கன் தோளடர்த்தாராகிய இராமேச்சுரம் மேயார்
கொள்கைகளேயாகும். பொன் திகழ் - பொன்னில் திகழ்வதுபோற் காணப்
படுகின்ற எனினுமாம்.

     9.பொ-ரை:அம்பு எய்தலில் வல்ல இராமபிரான் புகழ்ந்து
ஏத்திவாழ்த்தும் திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில், விரும்பி
வீற்றிருந்தருகின்ற, இடபம் பொறித்த வெற்றிக் கொடியை ஏந்திய
சிவபெருமான், திருமால், பிரமன் இவர்களால் அறியப்படாதவர். இளமையும்,
அழகும் அமைந்த திருவுருவினர். ஒளி பொருந்திய நெருப்பைத் தம்
கையிலேந்தி ஆடுகின்ற, தேவர்கட்கெல்லாம் இறைவனான அப்பெருமானின்
அருட்செயலின் மெய்ம்மையை அறிவோர் சிவஞானிகளாவர்.

     கு-ரை:நோக்கொ(ண்)ணாத - நோக்க ஒண்ணாத. குழகன் -
இளமையையுடையவன். மேவலன் - அனைவராலும் விரும்பப்படு