|
திங்களை
வைத்தன லாட லினார்திரு
நாரை யூர்மேய
வெங்கனல் வெண்ணீ றணிய வல்லா
ரவரே விழுமியரே. 5 |
3895. |
பாரு
றுவாய் மையினார் பரவும் |
|
பரமேட்டி
பைங்கொன்றைத்
தாரு றுமார் புடையான் மலையின்
றலைவன் மலைமகளைச்
சீரு றுமா மறுகிற் சிறைவண்
டறையுந் திருநாரை
யூரு றையெம் மிறைவர்க் கிவையொன்
றொடொன் றொவ்வாவே. 6 |
நாரையூர் என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர்.
வெங்கனலால் நீறாக்கப்பட்ட வெண்ணீற்றினை அணியவல்ல அப்பெருமானே
யாவரினும் மேலானவர் ஆவர்.
கு-ரை:
பொங்கு - தழைத்த (இளம் கொள்றையினார்).
கொன்றையினார் - கொன்றையின் நாண் மலரையணிந்தவர். இளமை -
இங்குப் புதுமையை யுணர்த்திற்று. பழம் பூ - முதிய பூவைக் குறிக்கும்.
ஆர் இடர் - ஆர்த்த இடர், பிணித்ததுயர். (வெம்) கனல் வெண்ணீறு
அணியவல்லவர். அவரே விழுமியவர் - "யாவர்க்கும் மேலாம் அளவிலாச்
சீருடையான். (தி. 8 திருவெண்பா. 8)
6.
பொ-ரை: சிவபெருமான், இந்நிலவுலகம் முழுவதும் புகழ் பரவும்
மெய்யுணர்வுடையவர்களால் வணங்கப்படும் மேலான பரம்பொருள் ஆவார்.
பசுமைவாய்ந்த கொன்றை மாலையை அணிந்த மார்புடையவர்.
கைலைமலையின் தலைவர். மலைமகளைச் சிறப்புடன் ஒரு பாகமாகக்
கொண்டவர். வீதிகள் சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற திருநாரையூர்
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்கின்ற இறைவர் அணிந்துள்ள
பொருள்கள் ஒன்றோடொன்று ஒவ்வாதனவாம்.
கு-ரை:
பார் - பூமி முற்றும். உறு - (புகழ்) பரவுதலையுடைய.
வாய்மையினார் - சைவ சீலத்தையுடையவர்கள். பரவும் - துதிக்கும்.
|