3907. |
புரிதரு
புன்சடை பொன்றயங்கப் |
|
புரிநூல்
புரண்டிலங்க
விரைதரு வேழத்தி னீருரிதோன்
மேன்மூடி வேய்புரைதோள்
அரைதரு பூந்துகி லாரணங்கை
அமர்ந்தா ரிடம்போலும்
வரைதரு தொல்புகழ் வாழ்க்கையறா
வலம்புர நன்னகரே. 7 |
அறா - நிங்காத வலம்புர
நன்னகர்.
7.
பொ-ரை: முறுக்குண்ட மென்மையான சடை பொன்போல் ஒளிர,
முப்புரிநூல் மார்பில் புரண்டு விளங்க, மிக வேகமாகச் செல்லக்கூடிய
யானையின் இழுத்து உரிக்கப்பட்ட தோலை உடலின் மேல் போர்த்தி,
மூங்கிலையொத்த தோளையுடையவளாய், இடையில் அழகிய ஆடையை
அணிந்துள்ள உமாதேவியை உடனாகக் கொண்டு சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம், புலவர்களால் போற்றப்படும் பழம் புகழுடைய,
குடிமக்களின் செல்வ வாழ்க்கை என்றும் குறையாத திருவலம்புரம் என்னும்
நன்னகர் ஆகும்.
கு-ரை:
புரிதரு - முறுக்குண்ட புன்சடை. பொன்தயங்க - பொன்னைப்
போல் ஒளிர, புரிநூல், புரண்டு இலங்க - மார்பில் புரண்டு விளங்க.
விரைதரு - விரைந்து செல்ல வல்ல. வேழத்தின் - யானையின். ஈர்
உரித்தோல் - இழுத்து உரித்த தோலை. மேல் - உடம்பின் மேல். மூடி -
போர்த்து. வேய் புரைதோள் - மூங்கிலை யொத்த தோளையுடைய. அரை -
இடுப்பில். தரு - அணிந்த. பூந்துகில் - பொலிவுடைய ஆடை. ஆரணங்கு
(அருமை + அணங்கு) அரிய தெய்வமாகிய உமாதேவியாரை. அமர்ந்தார் -
விரும்பினவராகிய சிவபெருமான். வரை தரு - புலவராற் கவியெழுதிப்
புகழப்படும். தொல் புகழ் - பழமையான புகழையுடைய. வாழ்க்கை -
குடிமக்களின் செல்வம். அறா - குறையாத. வலம்புர நன்னகர். வரைதரு
புகழ் "உயர்
|