பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)104. திருப்பரிதிநியமம்1203

ஏடலர் சோர வெழில்கவர்ந்த
     இறைவர்க் கிடம்போலும்
பாடல ராடல ராய்வணங்கும்
     பரிதிந் நியமமே.                     9

3921. கல்வள ராடையர் கையிலுண்ணுங்
       கழுக்க ளிழுக்கான
சொல்வள மாக நினைக்கவேண்டா
     சுடுநீ றதுவாடி
நல்வளை சோர நலங்கவர்ந்த
     நாதர்க் கிடம்போலும்
பல்வளர் முல்லையங் கொல்லைவேலிப்
     பரிதிந் நியமமே.                     10


விளையாடுதலை உடையவராய் நாடோறும் இளமையும், அழகு
முடையவராய்ப் பிச்சையேற்றுத் திரிபவர், சிவபெருமான். அவர்
இதழ்களையுடைய தாமரை போன்ற என்முகம் சோர்வடைய என் அழகைக்
கவர்ந்த கள்வர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அடியவர்கள்
பக்திப் பாடல்களைப் பாடி, ஆடி வணங்கும் திருப்பரிதிநியமம் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: தேடிக் காணாதவர்களாகிய நான்முகனும் திருமாலும் என
உம்மை விரிக்க. கூடலர் - அவர்களிடத்துக் காணக் கூடாதவராகி
எம்மிடத்து. ஆடலர் ஆகி - விளையாடுதலை யுடையவராய். நாளும்
நாடோறும். குழகர் - அழகினையுடையவர். ஏடு அலர் - (கூந்தலிலணிந்த)
இதழ்களையுடைய மலர்கள், பாடலர் ஆடலராய் அடியார் வணங்கும்.

     10. பொ-ரை: காவிக்கல்லால் துவர்நிறம் பெற்ற ஆடையணிந்த
புத்தர்களும், கையில் உணவு வாங்கி உண்ணும் கழுக்களான சமணர்களும்
கூறும், குற்றமுடைய சொற்களைப் பொருளென நினைக்க வேண்டா. சுட்ட
திருவெண்ணீறு அணிந்து, என் நல் வளையல்கள் கழல, என் பெண்மை
நலத்தைக் கவர்ந்த தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம்,
பெண்களின் பற்களைப் போல அரும்பு அடர்ந்த முல்லைவனமே வேலியாக
உடைய திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். அப்பெருமானை
வழிபட்டு உய்வீர்களாக என்பது குறிப்பு.