பக்கம் எண் :

1216திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

மன்னிய மாமறை யோர்கள்போற்றும்
     வலஞ்சுழி வாணர்தம்மேல்
உன்னிய சிந்தையி னீங்ககில்லார்க்
     குயர்வாம் பிணிபோமே.                3

3937. விடையொரு பாலொரு பால்விரும்பு
       மெல்லியல் புல்கியதோர்
சடையொரு பாலொடு பாலிடங்கொள்
     தாழ்குழல் போற்றிசைப்ப
நடையொரு பாலொரு பால்சிலம்பு
     நாளும் வலஞ்சுழிசேர்
அடையொரு பாலடை யாதசெய்யுஞ்
     செய்கை யறியோமே.                  4


வேதங்களில் வல்ல அந்தணர்கள் போற்றும் திருவலஞ்சுழி என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை இடையறாது சிந்தித்து
வழிபடும் அடியவர்கட்கு எல்லா நலன்களும் உண்டாகும். நோய் நீங்கும்.

     கு-ரை: மின் இயலும் - ஒளி பொருந்திய, சடை, தாழ - தொங்க.
அரவு ஆட வலஞ்சுழிவாணராயிருப்பவர் என்க. உயர்வு ஆம் - முத்தி
எய்தும். உயர்வு ஆகுபெயர். உன்னிய சிந்தையின் நீங்ககில்லார் என்றது
“ஓயாதே உள்குவார்” என்ற கருத்து (தி.8 திருவாசகம்).

     4. பொ-ரை: சிவபெருமானுக்கு இடபவாகனம் ஒரு பக்கம், விரும்பிச்
சேர்ந்து மெல்லியல்புடைய கங்காதேவி ஒரு பக்கம். விரிந்து பரந்த சடை
ஒரு பக்கம். தாழ்ந்த கூந்தலையுடைய உமாதேவி ஒரு பக்கம். ஏறுபோல்
பீடுநடை பயிலும் திருவடி ஒருபக்கம். சிலம்பு அணிந்த திருவடி ஒருபக்கம்.
திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை
நாளும் வழிபடுக. முற்கூறியவை வேறெங்கும் சென்றடையாது சிவனையே
அடையும் சிறப்பைச் சிற்றறிவுடைய நாம் அறியோம்.

     கு-ரை: விடை ஒருபால் - இடபம் ஒருபுறம், ஒருபால் ... ... மெல்லியல்
- ஒருபுறம் அம்பிகை. மெல்லியல் புல்கியதோர் சடை - கங்காதேவி
தங்கியதாகிய சடை. ஒருபால் (மெல்லியல் என்ற